சுடச்சுட

  
  anand

  லண்டனில் நடைபெற்றும் வரும் கிளாசிக் செஸ் போட்டியின் 3ஆவது சுற்றிலும் இந்திய வீரரும் உலக சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்த் டிரா செய்தார்.

  இப்போட்டியின் 3ஆவது சுற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இச்சுற்றில் விளையாடிய ஆனந்த், ஆர்மேனியாவின் லிவோன் அரோனியனுடன் டிரா செய்தார்.

  இச்சுற்றில் வெற்றி பெறும் வாய்ப்பு ஆனந்துக்கு பிரகாசமாக இருந்தது. ஆனால் அரோனியனின் சாமர்த்தியத்தால் இந்த ஆட்டம் டிராவானது.

  இச்சுற்றின் மற்ற ஆட்டங்களில் உலகில் முதல்நிலை வீரரான நார்வேயின் மக்னஸ் கார்ல்சென், ரஷியாவின் விளாதிமிர் க்ராம்னிக்குடன் டிரா செய்தார்.

  9 வீரர்கள் கலந்து கொண்ட இப்போட்டியின் 3 சுற்றுகள் முடிவில் கார்ல்சென் மற்றும் க்ராம்னிக் ஆகியோர் 7 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். இங்கிலாந்து வீரர்களான மைக்கேல் ஆடம்ஸ் 6 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலும், ஹிகரு நகமுரா

  4ஆம் இடத்திலும் உள்ளனர்.

  இந்தியாவின் ஆனந்த் மற்றும் இங்கிலாந்தின் ஜோன்ஸ் ஆகியோர் 2 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் உளளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai