சுடச்சுட

  

  ஆர்மேனியாவில் நடைபெற்று இளையோர் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு இரு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

  வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் 75 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சந்தீப் சர்மா, ரஷியாவின் மகமூத் மத்யூவை சந்தித்தார்.

  ஆரம்பத்தில் கடுமையாகப் போராடிய சந்தீப் சர்மா, கடைசி நேரத்தில் தடுமாற்றம் கண்டார். இதனால் 9-15 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி கண்ட சந்தீப் சர்மா வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறினார்.

  49 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் லலிதா பிரசாத் 8-13 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவின் எல்.வி. பின்னிடம் தோல்வி கண்டார். இதனால் இவருக்கும் வெண்கலப் பதக்கமே கிடைத்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai