சுடச்சுட

  

  உலக ஹாக்கித் தொடர் சென்னையை பந்தாடியது கர்நாடகம்

  By -ஏ.வி.பெருமாள்-  |   Published on : 26th September 2012 01:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சென்னை, மார்ச் 10: உலக ஹாக்கித் தொடர் போட்டியில் கர்நாடகம் லயன்ஸ் அணி 5-3 என்ற கணக்கில் சென்னை சீட்டாûஸ வீழ்த்தியது.

   கர்நாடக அணியின் கேப்டன் ரவிபால் சிங் ஹாட்ரிக் கோலடித்து அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

   சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோட்டைவிட்டது சென்னை. 26-வது நிமிடத்தில் ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார் கர்நாடக கேப்டன் ரவிபால் சிங். 33-வது நிமிடத்தில் கர்நாடகத்தின் விநாயக் பிஜ்வாத் கோலடிக்க முதல் பாதி ஆட்டத்தில் கர்நாடகம் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு 37-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் சென்னைக்கு முதல் கோல் கிடைத்தது. இம்ரான் வார்ஸி இந்த கோலை அடித்தார். 56 மற்றும் 63-வது நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்தார் கர்நாடக கேப்டன் ரவிபால் சிங். இதனால் அந்த அணி 4-1 என்ற கணக்கில் வெற்றியை நெருங்கியது.

   67-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சென்னையின் இம்ரான் வார்ஸி கோலாக்கினார். 68-வது நிமிடத்தில் கர்நாடகத்தின் நிதின் குமார் அற்புதமாக பந்தை எடுத்துச் செல்ல, அதை கோலாக்கினார் குல்லு தீபக். ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் சென்னையின் மார்க் ஹாரிஸ் கோலடித்தார். இறுதியில் கர்நாடகம் 5-3 என்ற கணக்கில் சென்னையை வீழ்த்தியது.

   சென்னை வீரர்கள் தங்களுக்கு கிடைத்த 8 பெனால்டி கார்னர் வாய்ப்புகளில் 3-ல் மட்டுமே கோலடித்தனர். 5 வாய்ப்புகளை கோட்டைவிட்டனர். ஆனால் கர்நாடக அணி அடித்த கோல்கள் அனைத்துமே ஃபீல்டு கோல் ஆகும். அந்த அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பேதும் கிடைக்கவில்லை. முன்னணி வீரர்கள் இல்லாதபோதும் சிறப்பாக ஆடி வெற்றி கண்டது கர்நாடக அணி.

   கர்நாடக அணிக்கு இது 2-வது வெற்றியாகும். 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள அந்த அணி 2 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு டிராவுடன் 7 புள்ளிகளைப் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

   பஞ்சாப் வெற்றி: மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஷெர்-இ-பஞ்சாப் 3-2 என்ற கணக்கில் போபால் பாத்ஷாûஸ வீழ்த்தியது.

   

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai