சுடச்சுட

  

  இண்டியன் வேல்ஸ், மார்ச் 10: அமெரிக்காவில் நடைபெற்று வரும் இண்டியன் வேல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பெலாரஸின் விக்டோரியா அசரென்கா பெரும் போராட்டத்துக்குப்பின் முதல்சுற்றில் வெற்றிபெற்றார்.

   இப்போட்டியில் ஜெர்மனியின் மோனா பார்தெல், அவருக்கு சுமார் 3 மணி நேரம் கடும் நெருக்கடியை அளித்தார். இறுதியில் 6-4,6-7(4/7), 7-6(8/6) என்ற கணக்கில் அசரென்கா வென்றார். 21 வயது இளம் வீராங்கனையான மோனா தரவரிசையில் 37-வது இடத்தில் உள்ளார்.

   அசரென்காவுக்கு கடும் நெருக்கடி அளித்தது குறித்துப் பேசிய அவர், "இப்போட்டிக்காக கடுமையாகப் பயிற்சி மேற்கொண்டேன். எனினும் முதல்நிலை வீராங்கனைக்கு எதிரான போட்டி என்பதால் கடினமாக இருந்தது. இப்போட்டியில் வெற்றிபெற முடியாதது எனக்கு வருத்தம்தான். ஆனால் மீண்டும் இதேபோன்ற ஒரு வாய்ப்பு கிடைக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் டென்னிஸில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிப்பேன். ' என்று கூறினார்.

   முன்னதாக கடந்த மாதம் துபையில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியின்போது காயம் காரணமாக பாதியிலேயே அசரென்கா வெளியேறினார். அதன் பிறகு இந்தப் போட்டியில்தான் மீண்டும் கலந்து கொண்டார். போராடிப் பெற்ற வெற்றி குறித்து கருத்துத் தெரிவித்த அசரென்கா, "இந்தப் போட்டியில் எனது ஆட்டம் சிறப்பாக இல்லை. எனினும் வெற்றி பெறுவது முக்கியமானது. என்னை எதிர்த்து விளையாடிய மோனா சிறப்பாக செயல்பட்டார்' என்றார்.

   விக்டோரியா அசரென்கா

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai