சுடச்சுட

  

  பரபரப்பான கட்டத்தில் நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா டெஸ்ட்

  Published on : 26th September 2012 01:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  டுனிடின், மார்ச் 10: நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

   ஆட்டத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை, நியூசிலாந்து வெற்றி பெற இன்னும் 264 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

   நியூசிலாந்தின் டுனிடின் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டி புதன்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து, முதலில் தென்னாப்பிரிக்காவை பேட் செய்ய அழைத்தது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 238 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து நியூசிலாந்து 273 ரன்களுக்கு முதல் இன்னிங்ûஸ இழந்தது.

   தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ûஸ விளையாடிய தென்னாப்பிரிக்கா, முதலில் தடுமாறினாலும் பின்னர் சிறப்பாக விளையாடி ரன் குவித்தது.

   ஸ்மித், காலிஸ், ருடால்ஃப் சதம்: அந்த அணி மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை, தென்னாப்பிரிக்க கேப்டன் ஸ்மித் 115 ரன்கள் எடுத்தார். 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா 3 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்திருந்தது. காலிஸ் 107 ரன்களுடனும், ருடால்ஃப் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

   4-வது நாளான சனிக்கிழமை இருவரும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். காலிஸ் 113 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டிவில்லியர்ஸ் 29 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.

   தொடர்ந்து மார்க் பவுச்சர் களமிறங்கினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ருடால்ஃப் சதமடித்தார். 5 விக்கெட் இழப்புக்கு 435 ரன்கள் என்ற நிலையில் இருந்த போது தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ûஸ டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

   நியூசிலாந்துக்கு இலக்கு 401: முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 35 ரன்கள் பின்தங்கியிருந்தபோதிலும், இரண்டாவது இன்னிங்ஸில் 435 ரன்கள் எடுத்ததால், நியூசிலாந்தை விட 400 ரன்கள் அதிகம் எடுத்திருந்தது. இதனால் 2-வது இன்னிங்ஸில் 401 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நியூசிலாந்துக்கு நிர்ணயிக்கப்பட்டது.

   தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நிக்கோல் 19 ரன்களிலும், கப்டில் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.

   ஆனால் அடுத்து ஜோடி சேர்ந்த மெக்கல்லம், கேப்டன் ராஸ் டெய்லர் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். 4-வது நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்துள்ளது. மெக்கல்லம் 58 ரன்களுடனும், டெய்லர் 48 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

   நியூசிலாந்து வெற்றி பெற போட்டியின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை இன்னும் 264 ரன்கள் எடுக்க வேண்டும். அதே நேரத்தில் இந்த ஸ்கோரை எட்டும் முன் மீதமுள்ள 8 விக்கெட்டுகளையும் வீழ்த்திவிட்டால் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறும்.

   இதனால் கடைசி நாள் ஆட்டம் மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.

   சுருக்கமான ஸ்கோர்

   தென்னாப்பிரிக்கா

   முதல் இன்னிங்ஸ் 238

   (ஸ்மித் 53, ருடால்ஃப் 52.

   மார்டீன் 4வி/56)

   2-வது இன்னிங்ஸ்

   435/5 டிக்ளேர்

   (ஸ்மித் 115, காலிஸ் 113, ருடால்ஃப் 105*, பிரேஸ்வெல் 3வி/70)

   நியூசிலாந்து

   முதல் இன்னிங்ஸ் 273

   (மெக்கல்லம் 48, ராஸ் டெய்லர் 44, பிலாந்தர் 4வி/72)

   2-வது இன்னிங்ஸ் 137/2

   (மெக்கல்லம் 58*,

   ராஸ் டெய்லர் 48*)

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai