சுடச்சுட

  

  கோவை, மார்ச் 10: அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வாள் வீச்சுப் போட்டியில், "ஃபாயில்' ஆண்கள் குழுப் போட்டியில் பஞ்சாபி பல்கலைக் கழகம், "எபி' பெண்கள் குழுப் போட்டியில் கண்ணூர் பல்கலைக்கழக அணிகள் தங்கப் பதக்கம் பெற்றன.

   இப் போட்டிகள் கோவை குமரகுரு பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் வியாழக்கிழமை தொடங்கின. வெள்ளிக்கிழமை நடந்த "ஃபாயில்' பிரிவு ஆண்கள் குழுப் போட்டியில் 22 அணிகள் பங்கேற்றன.

   அரையிறுதிப் போட்டியில் பஞ்சாபி பல்கலைக்கழக அணி மணிப்பூர் அணியை 15-13 என்ற புள்ளிக் கணக்கிலும், குருஷேத்ரா அணி பஞ்சாப் அணியை 15-12 என்ற புள்ளிக்கணக்கிலும் வென்றன.

   இறுதிப் போட்டியில் பஞ்சாபி பல்கலைக்கழக அணி 15-13 என்ற புள்ளிக்கணக்கில் குருúக்ஷத்ரா அணியை வென்று தங்கப்பதக்கம் பெற்றது. குருúக்ஷத்ரா அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. அரையிறுதியில் தோல்வியடைந்த பஞ்சாப் மற்றும் மணிப்பூர் பல்கலைக்கழக அணிகள் வெண்கலப் பதக்கம் பெற்றன.

   பெண்கள் பிரிவு: "எபி' பிரிவில் பெண்கள் குழுப்போட்டியின் அரையிறுதிப் போட்டியில் கண்ணூர் அணி, திருச்சி அண்ணா பல்கலைக்கழக அணியை 15-4 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. மணிப்பூர் அணி கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக அணியை 15-6 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

   இறுதிப் போட்டியில் கண்ணூர் அணி மணிப்பூர் அணியை 15-7 என்ற புள்ளிக்கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. மணிப்பூர் அணிக்கு வெள்ளிப் பதக்கமும், அவிநாசிலிங்கம் மற்றும் திருச்சி அண்ணா பல்கலைக்கழக அணிகள் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றின.

   "எபி' தனிப் போட்டிகள்: "எபி' ஆண்கள் தனிப் போட்டியில் பஞ்சாபி பல்கலைக் கழகத்தின் அஜிங்க்யா அஷோக் தங்கப் பதக்கமும், நிடேஷ் நவ் வெள்ளிப் பதக்கமும், கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின் நரேஷ், கேரள பல்கலைக் கழகத்தின் சஞ்சு வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

   இதே பிரிவில் பெண்கள் தனிப்போட்டியில் பஞ்சாபி பல்கலைக் கழகத்தின் ஷம்மி பிரீத் தங்கப் பதக்கமும், கண்ணூர் பல்கலை.யின் ஸ்டெபிதா வெள்ளிப் பதக்கமும், குருநானக்தேவ் பல்கலைக்கழகத்தின் கமல் தீப் கவுர், மும்பையின் சோனாலி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

   "úஸபர்' பிரிவு பெண்கள் தனிப் போட்டி: "úஸபர்' பிரிவு பெண்கள் தனிப் போட்டியில் பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் கோமல் பிரீத் சுக்லா தங்கம், கவால்ஜித் கவுர் வெள்ளி, கண்ணூர் பல்கலைக்கழகத்தின் பரணிதேவி, மெகன் ராச்சன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

   

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai