சுடச்சுட

  

  அகில இந்திய மகளிர் ஹாக்கி: அரையிறுதியில் மைசூர், சென்னை அணிகள்

  Published on : 20th September 2012 06:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவில்பட்டி, மே 23: கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய மகளிர் ஹாக்கிப் போட்டியின் அரையிறுதிக்கு மைசூர், சென்னை அணிகள் முன்னேறியுள்ளன.

   தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழா கொண்டாட்டத்தையொட்டி சாரா கோப்பைக்கான அகில இந்திய மகளிர் ஹாக்கிப் போட்டிகள் கோவில்பட்டி திட்டங்குளம் பாரதி ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

   3-வது நாளான புதன்கிழமை காலையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சேலம் மாவட்ட அணி 13-0 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி மாவட்ட அணியைத் தோற்கடித்தது. 2-வது ஆட்டத்தில் திருப்பூர் மாவட்ட அணி 1-0 என்ற கணக்கில் சென்னை மேயர் சம்பந்தம் அணியை வீழ்த்தியது.

   மாலையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் மைசூர் விளையாட்டு விடுதி அணி 3-1 என்ற கணக்கில் சேலம் மாவட்ட அணியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

   ஆந்திரம் அனந்தபூர் ஹாக்கி அகாதெமி, சென்னை சாய் அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் கோலின்றி (0-0)டிராவில் முடிந்தன. இருப்பினும் புள்ளிகள் அடிப்படையில் சென்னை சென்னை சாய் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

   நடுவர்களாக அனுபாமா, சரவணவேல், ஜெயமுருகன், தியாகபூமி ஆகியோர் செயல்பட்டனர்.

   வியாழக்கிழமை பகல் 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கேரள மாநிலம் ஆலுவா யூனியன் கிறிஸ்தவ கல்லூரி அணியும், திருப்பூர் மாவட்ட அணியும் மோதுகின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai