சுடச்சுட

    

    அஸ்லான் ஷா ஹாக்கி இன்று தொடக்கம்: நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

    Published on : 20th September 2012 06:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இபோ (மலேசியா), மே 23: அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி மலேசியாவில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

     5 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தைச் சந்திக்கிறது.

     2012-ம் ஆண்டுக்கான சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி இபோ நகரில் உள்ள சுல்தான் அஸ்லான் ஷா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் அதிக முறை (6 முறை) சாம்பியன் பட்டம் வென்ற அணியான ஆஸ்திரேலியா ஒலிம்பிக் போட்டிக்காக தயாராகி வருவதால் இந்த முறை பங்கேற்கவில்லை.

     அதனால் இந்தியா, பிரிட்டன், நியூஸிலாந்து, பாகிஸ்தான், கொரியா, ஆர்ஜென்டீனா, மலேசியா ஆகிய 7 அணிகள் மட்டுமே பங்கேற்றுள்ளன. இந்திய அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற உற்சாகத்தோடு இந்தப் போட்டியில் நியூஸிலாந்தைச் சந்திக்கிறது.

     இருப்பினும் இதில் மலேசியாவைத் தவிர அனைத்து அணிகளுமே தரவரிசையில் இந்தியாவைவிட முன்னிலையில் உள்ள அணிகள் என்பதால் இந்திய அணிக்கு நிச்சயம் சவால் காத்திருக்கிறது.

     2009-ல் பட்டம் வென்ற இந்திய அணி, 2010-ல் கொரியாவுடன் இணைந்து கூட்டுச் சாம்பியன் ஆனது. ஆனால் 2011-ல் 7 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் இந்தியா 6-வது இடத்தையே பிடித்தது.

     இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் நீல மற்றும் "பிங்க்' நிறத்தினாலான ஹாக்கி மைதானங்களில் வீரர்கள் விளையாடவுள்ளனர். அதற்கு முன்னோட்டமாக இபோ மைதானத்திலும் நீல மற்றும் "பிங்க்' நிறத்தினாலான பிட்ச் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் மஞ்சள் நிறத்தினாலான பந்துகள் பயன்படுத்தப்படவுள்ளன.

     இதுவரை பச்சை நிறத்தினாலான மைதானத்தில், வெள்ளை நிற பந்துகளைப் பயன்படுத்தியே ஹாக்கி விளையாடப்பட்டு வந்தது.

     

     இன்றைய ஆட்டங்கள்

     பாகிஸ்தான்-ஆர்ஜென்டீனா

     இந்தியா-நியூஸிலாந்து

     கொரியா-மலேசியா

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai