சுடச்சுட

  

  புணே, மே 23: ஐபிஎல் போட்டியின் பிளே ஆஃப் சுற்றில் 18 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ûஸ வீழ்த்தி இறுதிச்சுற்றில் நுழைந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

   ஐபிஎல் போட்டி வரலாற்றில் முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது நைட் ரைடர்ஸ். முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய டெல்லி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. புணேவில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் கெüதம் கம்பீர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இர்ஃபான் பதான் வீசிய முதல் ஓவரை எதிர்கொண்ட மெக்கல்லம் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

   உமேஷ் யாதவ் வீசிய அடுத்த ஓவரில் சிக்ஸர் அடித்து அதிரடியைத் தொடங்கினார் கம்பீர். வருண் ஆரோன் வீசிய 6-வது ஓவரில் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாசிய கம்பீர், துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார். 16 பந்துகளைச் சந்தித்த அவர் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்தார்.

   ஆமைவேகத்தில் ஆடிய மெக்கல்லம் 36 பந்துகளில் 31 ரன்களே எடுத்தார். பின்னர் வந்த ஷகிப் அல்ஹசன் ஒரு ரன்னில் வீழ்ந்தார். ஒரு ரன் எடுத்திருந்தபோது பதான் விட்ட கேட்ச்சால் வாழ்வு பெற்ற காலிஸ் 33 பந்துகளில் 30 ரன்களே எடுத்தார். இதனால் 15 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன்களே எடுத்திருந்தது.

   இதன்பிறகு ஜோடி சேர்ந்த யூசுப் பதானும், லட்சுமி சுக்லாவும் அதிரடியாக விளையாட கடைசி 4 ஓவர்களில் மட்டும் கொல்கத்தாவுக்கு 56 ரன்கள் கிடைத்தன. யூசுப் பதான் 21 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 40, சுக்லா 11 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

   டெல்லி தோல்வி: பின்னர் பேட் செய்த டெல்லி அணியில் டேவிட் வார்னர் 7, சேவாக் 10 ரன்களில் வெளியேறினர். 28 பந்துகளைச் சந்தித்த நமன் ஓஜா 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்தார். 33 பந்துகளைச் சந்தித்த ஜெயவர்த்தனா 6 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு டெல்லியின் சரிவு தவிர்க்க முடியாததானது. யூசுப் பதான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai