சுடச்சுட

    

    கரூர், மே 23: கரூரில் நடைபெற்று வரும் 54-வது அகில இந்திய கூடைப்பந்து போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தில் வருமான வரித்துறை, ராணுவ அணி மற்றும் இந்திய கடற்படை அணி ஆகியவை வெற்றி கண்டன.

     கரூர் மாவட்டக் கூடைப்பந்தாட்டக் கழகம் சார்பில் எல்ஆர்ஜி நாயுடு சுழற்கோப்பைக்கான 54-வது ஆடவர் கூடைப்பந்து போட்டி மற்றும் கேசிபி இந்திராணி நினைவு சுழற்கோப்பைக்கான 4-வது மகளிர் கூடைப்பந்து போட்டி ஆகியவை கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

     செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை வருமான வரித்துறை அணி 66-57 என்ற கணக்கில் பெங்களூர் விஜயா வங்கி அணியை வென்றது. வருமானவரித் துறை அணியின் ராம்குமார் 25 புள்ளிகளையும், ஆதித்யா 22 புள்ளிகளையும் பெற்றனர்.

     மற்றொரு ஆட்டத்தில் புது தில்லி இந்திய ராணுவ அணி 50-38 என்ற கணக்கில் செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியை தோற்கடித்தது.

     ராணுவ அணியில் கோபால்ராம் 23 புள்ளிகளையும், திலிப் குமார் 14 புள்ளிகளையும் பெற்றனர். இதேபோல் லோனாவில்லா இந்திய கடற்படை அணி 75-40 என்ற கணக்கில் திருவனந்தபுரம் கேஎஸ்இபி அணியை வீழ்த்தியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai