சுடச்சுட

  
  24spt2a

  பிரஸ்ஸல்ஸ் (பெல்ஜியம்), மே 23: டென்னிஸ் போட்டியில் 500-வது வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளார் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.

   டபிள்யூ.டி.ஏ. பிரஸ்ஸல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் காலிறுதிக்கு முன்னேறியதன் மூலம் அவர் இந்த சாதனையை எட்டியுள்ளார்.

   இப்போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா -அமெரிக்காவின் பெத்தானியே மடேக்சேன்ட்ஸ் ஜோடி 6-4, 6-2 என்ற நேர் செட்களில் குரேஷியாவின் மெர்வானா-ஆஸ்திரியாவின் கிளெமென்சிட்ஸ் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது. காலிறுதிச்சுற்றில் ரஷியாவின் எலினா பொவினா-பெல்ஜியத்தின் அலிசன் வானுய்ட்வாங்க் ஜோடியை சந்திக்கிறது சானியா ஜோடி.

   அதேநேரத்தில் இந்தப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் சானியா 1-6, 5-7 என்ற நேர் செட்களில் ருமேனியாவின் மோனிகாவிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

   சானியா ஒற்றையர் பிரிவில் 270, இரட்டையர் பிரிவில் 230 என மொத்தம் 500 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai