சுடச்சுட

  

  சென்னை, மே 23: சென்னை ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, அனகா அலங்காமணி ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

   புதன்கிழமை நடைபெற்ற முதல் சுற்றில் ஜோஷ்னா 11-8, 11-9, 5-11, 11-7 என்ற செட் கணக்கில் எகிப்தின் அஹமது கோஹாரோஃபை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் அனகா அலங்காமணி 4-11, 11-0, 11-5, 4-11, 11-8 என்ற செட் கணக்கில் மலேசியாவின் ஜுல்ஹிஜா அசனை வீழ்த்தி அடுத்த சுற்றை உறுதி செய்தார்.

   தகுதிச்சுற்றில் விளையாடி பிரதான சுற்றுக்கு தகுதிபெற்ற இந்தியாவின் அஷிதா, ஜூனியர் தேசிய சாம்பியன் ஹர்ஷித் கெüர் ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.

   காலிறுதிச்சுற்றில் ஜோஷ்னா சின்னப்பா, இங்கிலாந்தின் கேரி ராம்ஸீயையும், அனகா அலங்காமணி, மலேசியாவின் முனிரா ஜூசோவையும் சந்திக்கின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai