சுடச்சுட

  
  24spt1a

  பெங்களூர், மே 23: ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் (வெளியேற்றும் சுற்று) மும்பை இண்டியன்ஸூக்கு 188 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

   முதலில் பேட் செய்த சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது.

   அதிர்ச்சித் தொடக்கம்: பெங்களூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணியில் டூபிளெஸ்ஸýக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்பஜன் சிங், சென்னையை பேட் செய்ய அழைத்தார்.

   ஆட்டத்தின் 2-வது ஓவரை வீசிய குல்கர்னி, முரளி விஜய் (1), ரெய்னா (0) ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து அதிர்ச்சியளித்தார். இதையடுத்து ஹசியுடன் இணைந்தார் பத்ரிநாத். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தது. 39 பந்துகளைச் சந்தித்த பத்ரிநாத் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்தார். மைக் ஹசி 39 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

   அதிரடி ரன் மழை: பின்னர் வந்த ஜடேஜா ஒரு ரன்னில் வெளியேற, தோனியுடன் இணைந்தார் பிராவோ. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய தோனி, குல்கர்னி வீசிய 16-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார். தோனிக்கு இணையாக பிராவோ விளாசலில் இறங்க கடைசிக் கட்டத்தில் சென்னையின் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது.

   குல்கர்னி வீசிய கடைசி ஓவரில் பிராவோ இரு பிரமாண்ட சிக்ஸர்களை விளாச 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது சூப்பர் கிங்ஸ். தோனி 20 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 51, பிராவோ 14 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

   கடைசி 4 ஓவர்களில் 59:தோனி-பிராவோ ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 29 பந்துகளில் 73 ரன்கள் குவித்தது. கடைசி 4 ஓவர்களில் மட்டும் 59 ரன்கள் குவித்தது இந்த ஜோடி.

   தோனியின் சூப்பர் சிக்ஸ்

   பிராங்க்ளின் வீசிய 15-வது ஓவரின் கடைசிப் பந்தில் இமாலய சிக்ஸர் ஒன்றை அடித்தார் தோனி. அந்த பந்து மைதானத்தின் மேற்கூரைக்கு வெளியே சென்றது. இந்த ஐபிஎல் போட்டியில் அடிக்கப்பட்ட பிரமாண்ட சிக்ஸர் (112 மீ.) இதுதான். இதன்மூலம் கெயிலின் சிக்ஸர் சாதனையையும் (அதிகபட்ச தூரம் 111 மீ.) அவர் முறியடித்தார்.

   அதிவேக அரைசதம்

   20 பந்துகளில் அரைசதம் கண்டதன் மூலம் இந்த ஐபிஎல் போட்டியில் அதிவேக அரைசதம் கண்டவர் என்ற பெருமையையும் தோனி பெற்றார். முந்தைய ஆட்டத்தில் சரியாக விளையாடாதபோதும், தனக்கே உரிய பாணியில் இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடி அனைவரின் பாராட்டையும் பெற்றுவிட்டார் இந்த அதிர்ஷ்டக்கார தோனி.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai