சுடச்சுட

  
  24spt4a

  புது தில்லி, மே 23: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) சார்பில் முன்னாள் வீரர்களுக்கு வழங்கப்படவுள்ள பணப்பரிசு பட்டியலில் இருந்து கீர்த்தி ஆசாதின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

   ஐபிஎல் போட்டியில் கிடைத்த வருவாயில் இருந்து இந்த நிதி வழங்கப்படுகிறது. வீரர்களை தரம்பிரித்து அவர்களின் தகுதிக்கேற்றவாறு இந்த பணப்பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி கீர்த்தி ஆசாதுக்கு ரூ.35 லட்சம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

   முன்னாள் கிரிக்கெட் வீரரான கீர்த்தி ஆசாத், இப்போது பாஜக எம்.பி.யாகவுள்ளார். ஐபிஎல் போட்டியில் கறுப்புப் பணம் புழங்குவதாக குற்றம்சாட்டிய அவர், ஒருநாள் உண்ணாவிரதத்தையும் மேற்கொண்டார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்திலும் அவர் குரல் எழுப்பி வருகிறார். இதனால் கோபமடைந்த பிசிசிஐ அவருடைய பெயரை பணப் பரிசு பட்டியலில் இருந்து நீக்கிவிட்டதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

   இதுதொடர்பாக கீர்த்தி ஆசாதிடம் கேட்டபோது, அவர் கூறியது: என்னுடைய பெயர் நீக்கப்பட்டது தொடர்பாக பிசிசிஐயிடம் இருந்து எவ்வித தகவலும் வரவில்லை' என்றார்.

   பணப் பரிசு உங்களுக்கு வழங்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்வீர்களா? என்று கேட்டபோது, "அது முதலில் வரட்டும், அதன்பிறகு அதை ஏற்பதா, மறுப்பதா என்பதைப் பற்றி பேசுவோம்.

   இதுபோன்ற பணப் பரிசை கொடுத்து என்னுடைய வாயை அடைத்துவிடலாம் என்று நினைக்கிறது பிசிசிஐ. அவர்களின் எண்ணம் தவறானது. ஐபிஎல்லில் நடைபெற்ற ஊழல் இப்போது வெளிவந்துள்ளது. தவறு நடக்கும் போதெல்லாம் தொடர்ந்து போராடுவேன்' என்றார்.

   பிசிசிஐயிடம் இருந்து உங்களுக்கு ஓய்வூதியம் வருகிறதா என்ற கேள்விக்கு, "அது பற்றி தனக்குத் தெரியாது. தன்னுடைய கணக்கு தணிக்கையாளரிடம்தான் கேட்க வேண்டும்' என்றார்.

   ஐபிஎல் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் ஆசாத் தெரிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai