சுடச்சுட

  
  25spt6

  கோவில்பட்டி, மே 24: கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய மகளிர் ஹாக்கிப் போட்டியின் அரையிறுதிக்கு திருப்பூர் மாவட்ட அணி முன்னேறியுள்ளது.

   தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழா கொண்டாட்டத்தையொட்டி, சாரா கோப்பைக்கான அகில இந்திய மகளிர் ஹாக்கிப் போட்டி கோவில்பட்டி திட்டங்குளம் பாரதி ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

   4-வது நாளான வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் கேரள மாநிலம் ஆலுவா யூனியன் கிறிஸ்தவக் கல்லூரி அணியும், திருப்பூர் மாவட்ட அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோலடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதையடுத்து இரு அணிளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதன்மூலம் புள்ளிகள் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறியது திருப்பூர் மாவட்ட அணி.

   இன்றைய ஆட்டங்கள்: வெள்ளிக்கிழமை (மே 25) மாலை நடைபெறும் முதல் ஆட்டத்தில் திருப்பூர் மாவட்ட அணியும், சென்னை சாய் அணியும் மோதுகின்றன. 2-வது ஆட்டத்தில் மைசூர் விளையாட்டு விடுதி அணியும், ஈரோடு கே.ஓ.எம். அகாதெமி அணியும் மோதுகின்றன. 

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai