சுடச்சுட

  
  25spt1

  சென்னை, மே 24: சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஐபிஎல் போட்டியின் 2-வது அரையிறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

   லீக் சுற்றின் முடிவில் 22 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்த டேர்டெவில்ஸ், பிளே ஆஃப் சுற்றின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோற்றதால், இக்கட்டான சூழலில் சூப்பர் கிங்ûஸ அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது.

   இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியே இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாகப் போராடும். லீக் சுற்றில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியும், சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸýம் வெற்றி பெற்றுள்ளன.

   பெங்களூரில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றி கண்ட உற்சாகத்தில் களம் காண்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். அதேநேரத்தில் டெல்லி அணியோ சென்னையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் படுதோல்வி கண்டதால், மிகுந்த எச்சரிக்கையோடே இந்த ஆட்டத்தை எதிர்கொள்ளும்.

   சென்னை அணியைப் பொறுத்தவரையில் மைக் ஹசி, ரெய்னா, தோனி, பிராவோ, பத்ரிநாத், ஜடேஜா, அல்பி மோர்கல் ஆகியோர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை எட்ட முடியும். தோனி மீண்டும் பார்முக்கு திரும்பியிருப்பது சென்னையின் பேட்டிங் பலத்தை அதிகரித்துள்ளது. பிராவோ, ஜடேஜா, அல்பி மோர்கல் ஆகிய மூவருமே ஆல்ரவுண்டர்கள் வரிசையில் பலம் சேர்க்கிறார்கள். மும்பைக்கு எதிராக சிறப்பாக விளையாடி அணியைச் சரிவிலிருந்து மீட்டார் மைக் ஹசி. இதனால் டூபிளெஸ்ஸிஸýக்கு இந்த ஆட்டத்திலும் வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே.

   பெüலிங்கை எடுத்துக் கொண்டால், பெரிதும் நம்பப்பட்டவரான ஹில்பெனாஸ், மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 45 ரன்களை வாரி வழங்கினார்.

   இருப்பினும் சென்னையில் நடைபெற்ற டெல்லிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சூப்பர் கிங்ஸின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்ததால், அவர் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது. மோர்கல், பிராவோ ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருவது கூடுதல் பலம். அவர்கள் இந்த ஆட்டத்திலும் சிறப்பாக பந்துவீசும்பட்சத்தில் டெல்லியை குறைந்த ரன்னுக்குள் சுருட்ட முடியும். சுழற்பந்துவீச்சை வழக்கம்போல் அஸ்வின் தலைமையிலான கூட்டணி கவனிக்கிறது.

   டெல்லி அணிக்கு கேப்டன் சேவாக், டேவிட் வார்னர், ஜெயவர்த்தனா, நமன் ஓஜா, ராஸ் டெய்லர் ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். சேவாக், டேவிட் வார்னர் ஆகியோரில் ஒருவர் குறைந்தபட்சம் 10 ஓவர்கள் களத்தில் நின்றால்கூட ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடக்கூடியவர்கள். ஜெயவர்த்தனா, ராஸ் டெய்லர், நமன் ஓஜா ஆகியோர் மிடில் ஆர்டரில் பலம் சேர்க்கிறார்கள்.

   பெüலிங்கைப் பொறுத்தவரையில் மோர்ன் மோர்கல், உமேஷ் யாதவ், இர்ஃபான் பதான், வருண் ஆரோன் என பலம் வாய்ந்த வேகப்பந்து வீச்சு வரிசையைக் கொண்டுள்ளது டெல்லி. இந்த ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் மோர்ன் மோர்கல் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வருண் ஆரோன் கொல்கத்தாவுக்கு எதிராக அதிக ரன் கொடுத்தார்.

   இதனால் அவருக்குப் பதிலாக அகார்கருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. இரு அணிகளுமே பலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டத்தில் கடும் சவால் இருக்கும் என்று நம்பலாம்.

   அனிருத்தாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? முரளி விஜய் சரியாக விளையாடாததால், அவருக்குப் பதிலாக அனிருத்தா ஸ்ரீகாந்துக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இக்கட்டான நேரத்தில் களம் கண்ட அனிருத்தா, 2 சிக்ஸர்களுடன் 18 ரன்கள் எடுத்து சூப்பர் கிங்ஸýக்கு வெற்றி தேடித்தந்தார்.

   இருப்பினும் தோனி "சென்டிமென்ட்' பார்க்கக்கூடும் என்பதால் முரளி விஜயையே இந்த ஆட்டத்திலும் களமிறக்குவார் என்று கூறப்படுகிறது.

   

   3 கேலரிகளுக்கு அனுமதி: இன்று டிக்கெட் விற்பனை

   சேப்பாக்கம் மைதானத்தில் சீல் வைக்கப்பட்டிருந்த ஜி,எச், ஐ கேலரிகளை ரசிகர்களுக்கு திறந்துவிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதைடுத்து அதற்கான டிக்கெட் விற்பனை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

   வெள்ளிக்கிழமை (மே 25) நடைபெறவுள்ள சென்னை-டெல்லி ஆட்டம், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டம் ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. டிக்கெட்டின் விலை ரூ.500, ரூ. 750.

   காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை விக்டோரியா விடுதி சாலையில் உள்ள 4 மற்றும் 7-வது கவுன்ட்டர்களில் இந்த டிக்கெட் விற்பனை நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கெüரவ செயலர் கே.எஸ்.விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai