சுடச்சுட

  
  25spt5

  மாஸ்கோ, மே 24: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 10-வது சுற்றின் முடிவில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்ட் ஆகியோர் 5-5 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர்.

   வியாழக்கிழமை நடைபெற்ற இவர்களிருவருக்கும் இடையிலான 10-வது சுற்று டிராவில் முடிந்தது. இன்னும் 2 சுற்றுகளே மீதமுள்ளன.

   ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் 6 சுற்றுகள் டிராவில் முடிவடைந்தன.

   7-வது சுற்றில் கெல்ஃபான்ட் வெற்றி பெற்று முன்னிலை பெற்றார். ஆனால் 8-வது சுற்றில் ஆனந்த் வெற்றி பெற இருவரும் மீண்டும் 4-4 என்ற சமநிலையை எட்டினர்.

   இந்த நிலையில் புதன்கிழமை நடைபெற்ற 9-வது சுற்று டிராவில் முடிந்த நிலையில், இப்போது 10-வது சுற்றும் டிராவில் முடிந்துள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai