சுடச்சுட

  

  கரூர், மே 24: கரூரில் நடைபெற்று வரும் 54-வது அகில இந்திய கூடைப்பந்து போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தில் சென்னை, செகந்திராபாத் ரயில்வே அணிகள், ஓஎன்ஜிசி அணிகள் வெற்றி கண்டன.

   கரூர் மாவட்ட கூடைப்பந்தாட்டக் கழகத்தின் சார்பில், எல்ஆர்ஜி நாயுடு நினைவு சுழற்கோப்பைக்கான 54-வது அகில இந்திய ஆடவர் கூடைப்பந்து போட்டிகள் மற்றும் கேசிபி இந்திராணி நினைவு சுழற்கோப்பைக்கான 4-வது மகளிர் கூடைப்பந்து போட்டிகள் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

   புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டேராடூன் ஓஎன்ஜிசி அணி 62-44 என்ற கணக்கில் சென்னை சுங்கத்துறை அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் ஓஎன்ஜிசி வீரர் விமேலஸ் 14 புள்ளிகளையும், மோஹித் பண்டாரி 12 புள்ளிகளையும் பெற்றனர்.

   மற்றொரு ஆட்டத்தில் செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணி 58-54 என்ற கணக்கில் பெங்களூர் விஜயா வங்கியை வீழ்த்தியது. செகந்திராபாத் அணியைச் சேர்ந்த பங்கஜ், சுதீப்ரெட்டி ஆகியோர் தலா 13 புள்ளிகளைப் பெற்று அணியின் வெற்றிக்கு உதவினர்.

   மகளிர் பிரிவில் சென்னை தெற்கு ரயில்வே அணி 61-51 என்ற கணக்கில் செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியை வீழ்த்தியது. சென்னை அணியின் அனிதா சிறப்பாக விளையாடி 33 புள்ளிகளையும், அபூர்வா முரளிநாத் 9 புள்ளிகளையும் பெற்றுத் தந்தனர்.

   வியாழக்கிழமை மாலை நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் திருவனந்தபுரம் கேஎஸ்இபி அணி 55-54 என்ற கணக்கில் சென்னை சுங்கத்துறை அணியை வீழ்த்தியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai