சுடச்சுட

    
    25spt2

    பெங்களூர், மே 24: தோனியின் அதிரடியே ஆட்டத்தின் போக்கை மாற்றியதாக மும்பை இண்டியன்ஸ் கேப்டன் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

     பெங்களூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் 2-வது ஆட்டத்தில் (வெளியேற்றும்) 38 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ். இதன்பிறகு ஹர்பஜன் சிங் மேலும் கூறியது: தோனியின் அதிரடியே ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திவிட்டது. முன்னதாகவே தோனியை வீழ்த்தியிருந்தால், ஆட்டம் மும்பைக்கு சாதகமாக முடிந்திருக்கும். இந்த ஆட்டத்தில் தோனி அரைசதம் மிக முக்கியமானதாக அமைந்தது. அதுதான் எங்களிடம் இருந்து வெற்றியை பறித்துவிட்டது.

     அடுத்தடுத்த ஓவர்களில் சச்சின், வேயன் ஸ்மித், தினேஷ் கார்த்திக், ரோஹித் சர்மா ஆகியோர் ஆட்டமிழந்தது எங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது. நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. அதேநேரத்தில் சென்னை எங்களைவிட மிக நன்றாக விளையாடியது என்றார்.

     பிளெம்மிங் பாராட்டு: "பத்ரிநாத், மைக் ஹசி ஆகியோர் சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்ததாலேயே கடைசிக் கட்டத்தில் தோனி சிறப்பாக விளையாடி ரன் குவித்தார். ஒருவேளை 160 ரன்கள் வரை மட்டுமே எடுத்திருந்தால், மும்பை சேஸ் செய்து வெற்றி பெற்றிருக்கக்கூடும்' என்று சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai