சுடச்சுட

  

  புணே, பெங்களூர் அணிகளின் கணக்கு விவரங்கள்: வருமான வரித்துறை ஆய்வு

  Published on : 20th September 2012 06:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புது தில்லி, மே 24: புணே வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளின் நிதி முதலீடு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை ஆய்வு செய்யும் பணியை வியாழக்கிழமை நிறைவு செய்தது வருமான வரித்துறை.

   ஐபிஎல் போட்டியில் வரி ஏய்ப்பு நடைபெறுவதோடு, கறுப்புப் பணம் புழக்கத்தில் விடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

   புணே, பெங்களூர் அணிகளின் பல்வேறு நகரங்களில் உள்ள அலுவலகங்களுக்கு புதன்கிழமை சென்ற வருமான வரித்துறையினர் அங்கிருந்த பணப் பரிமாற்றம், பங்குச் சந்தை முதலீடு உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய கோப்புகள் மற்றும் மின்னணு கோப்புகளை பறிமுதல் செய்து எடுத்து வந்ததாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

   ஆய்வு செய்யும் பணிகள் நிறைவடைந்தைத் தொடர்ந்து விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு, அது தில்லியில் உள்ள மத்திய நேரடி வரித்துறை ஆணையத்துக்கு (சிபிடிடி) அனுப்பப்பட்டுவிட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai