சுடச்சுட

  

  சங்ககிரி, மே 24: சேலம் மாவட்டம், சங்ககிரியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தங்கக் கோப்பைக்கான மாநில கபடி போட்டி புதன்கிழமை தொடங்கியது.

   முதல் நாள் ஆட்டத்தில் ஆடவர் பிரிவில் சென்னை, சேலம் உள்ளிட்ட 7 அணிகளும், மகளிர் பிரிவி சேலம், கன்னியாகுமரி, தஞ்சாவூர் உள்ளிட்ட 5 அணிகளும் வெற்றி கண்டன.

   ஆடவர் பிரிவு: ஆடவர் பிரிவு ஆட்டங்களில் கன்னியாகுமரி அணி 40-13 என்ற கணக்கில் திருவண்ணாமலை அணியையும், திண்டுக்கல் அணி 36-29 என்ற கணக்கில் திருவள்ளுவர் அணியையும், நாகை அணி 42-20 என்ற கணக்கில் கரூர் அணியையும், சென்னை அணி 66-18 என்ற கணக்கில் கிருஷ்ணகிரியையும், சேலம் அணி 49-14 என்ற கணக்கில் விழுப்புரத்தையும், அரியலூர் அணி 48-47 என்ற கணக்கில் நாமக்கல்லையும் (48-47), காஞ்சிபுரம் அணி 63-20 என்ற கணக்கில் வேலூரையும் தோற்கடித்தன.

   மகளிர் பிரிவு: சேலம் அணி 62-10 என்ற கணக்கில் வேலூர் அணியைத் தோற்கடித்தது. கன்னியாகுமரி அணி புதுக்கோட்டையையும் (59-12), தஞ்சாவூர் அணி திருப்பூரையும் (51-12), திருவள்ளுர் அணி பெரம்பலூரையும் (57-40), திண்டுக்கல் அணி கடலூரையும் (48-11) தோற்கடித்தன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai