சுடச்சுட

  
  spt3

  பெங்களூர், மே 25: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணாவுடன் இணைந்து பட்டம் வெல்வேன் என்று மகேஷ் பூபதி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

  பெங்களூரில் விளையாட்டு தொடர்பான இணையதள தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை டைபெற்றது. இதில் பங்கேற்ற பூபதி கூறியது: ரோம், மாண்ட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் நானும், போபண்ணாவுடன் இணைந்து சிறப்பாக விளையாடியுள்ளோம். எனவே மிகுந்த நம்பிக்கையுடன் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியை எதிர்கொள்ள இருக்கிறோம். கடந்த 5 மாதங்களாகத்தான் போபண்ணாவும் இணைந்து விளையாடி வருகிறேன். குறைந்த காலம் என்றாலும் விளையாடும்போது எங்களுக்குள் சிறப்பான புரிந்துணர்வு உள்ளது. இதனால்தான் ரோம், மாண்ட்ரிட் டென்னிஸ் போட்டியில் அரையிறுதி வரை முன்னேறினோம் என்றார்.

  ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, " டென்னிஸ் மட்டுமின்றி குத்துச் சண்டை, துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை என பல்வேறு போட்டிகளில் திறமையான இந்திய வீரர்கள் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்குச் செல்கின்றனர். எனவே முன்பு எப்போதும் இருந்ததைவிட இந்த ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வெல்ல வாய்ப்பு உள்ளது என்றார் பூபதி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai