சுடச்சுட

  
  spt6

  திருவாரூர், மே 25: திருவாரூரில் நடைபெற்ற பெண்களுக்கான மாநில செஸ் போட்டியில் சென்னை வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றார்.

  திருவாரூர் மாவட்ட சதுரங்கக் கழகம், சிஏ ஹோண்டா நிறுவனம் ஏற்பாட்டில் திருவாரூரில் கடந்த 19-ம் தேதி செஸ் போட்டி தொடங்கி நடைபெற்று வந்தது.

  இதில் மாநிலம் முழுவதிலிருந்து 46 பேர் பங்கேற்றனர். 9 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியின் இறுதிச் சுற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

  இதில் சென்னை ஜே. சரண்யா 7 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றார். சென்னை எம். மகாலட்சுமி, மதுரை பி. ஆர்த்தி ஆகியோர் இரண்டு, மூன்றாமிடங்களை பிடித்தனர். சென்னையைச் சேர்ந்த வி. வர்ஷனி, பி. பாலகண்ணம்மாள், ஆர். வைசாலி, எம். சந்தியா, ஸ்ரீஜா, ஹேமபிரியா, அட்சயா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீநிதி, ஏ. ஹர்சினி ஆகியோர் சிறப்புப் பரிசு பெற்றனர்.

  வெற்றி பெற்றவர்களுக்கு திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்கத் தலைவர் சி. பாலமுருகன் பரிசு வழங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ். தமிழ்ச்செல்வன், சதுரங்க கழகத் தலைவர் என். சாந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai