சுடச்சுட

  
  spt5

  நாட்டிங்ஹாம், மே 25: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத்தீவுகள் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது.

  நாட்டிங்ஹாமில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத்தீவுகள் முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது.

  பரத், பாவெல் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். 4-வது ஓவரிலேயே பரத் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த எட்வட்ஸýம் நிலைக்கவில்லை. அவர் 7 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த டேரன் பிராவோ 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

  இதையடுத்து சந்தர்பால் களமிறங்கினார். அணியின் ஸ்கோர் 63 ஆக இருந்தபோது 33 ரன்களில் தொடக்க வீரர் பாவெல் விக்கெட்டைப் பறிகொடுத்தார். பின்னர் சந்தர்பாலுடன் சாமுவேல்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் ஓரளவுக்கு தாக்குப் பிடித்து விளையாடி ரன் சேர்த்தனர். இதனால் மேற்கிந்தியத்தீவுகள் 100 ரன்களைக் கடந்தது. ஸ்கோர் 125 ஆக இருந்தபோது சிறப்பாக விளையாடி வந்த சந்தர்பால் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

  இதனால் மேற்கிந்தியத்தீவுகள் மீண்டும் சரிவுப் பாதைக்குத் திரும்பியது. அடுத்து வந்த ராமதீனால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. பின்னர் சாமுவேல்ஸýடன் கேப்டன் சமி ஜோடி சேர்ந்தார். 50 ஓவர்களில் மேற்கிந்தியத்தீவுகள் 144 ரன்கள் எடுத்திருந்தது. சாமுவேல்ஸ் 38 ரன்களுடனும், சமி 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

  இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டுவர்ட் பிராட் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

  முன்னதாக லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai