Enable Javscript for better performance
\\\"ஹாட்ரிக்\\\' கனவில் சூப்பர் கிங்ஸ்; முதல் பட்ட முயற்சியில் நைட் ரைடர்ஸ்!- Dinamani

சுடச்சுட

  

  "ஹாட்ரிக்' கனவில் சூப்பர் கிங்ஸ்; முதல் பட்ட முயற்சியில் நைட் ரைடர்ஸ்!

  By ஏ.வி.பெருமாள்  |   Published on : 20th September 2012 06:59 AM  |   அ+அ அ-   |    |  

  muraliVijay

  சென்னை, மே 26: 5-வது ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

  "ஹாட்ரிக்' பட்டம் வெல்லும் கனவில் சென்னை சூப்பர் கிங்ஸýம், தலை (முதல்) பட்டத்தை வெல்லும் முனைப்பில் கொல்கத்தா நைடர் ரைடர்ஸýம் களம் காண்கின்றன.

  லீக் சுற்றுகளில் தடுமாறிய சூப்பர் கிங்ஸ், பிளே ஆஃப் சுற்றில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அபாயகரமான அணியாக உருவெடுத்துள்ளது. அதேநேரத்தில் நைட் ரைடர்ஸ் அணியும், லீக் சுற்றில் தொடங்கி பிளே ஆஃப் வரை சிறப்பாக விளையாடியதோடு, பலம் வாய்ந்த அணியாகவே திகழ்கிறது.

  கடந்த ஆட்டங்களில் பலம் வாய்ந்த மும்பை, டெல்லி அணிகளை வீழ்த்தியிருப்பதால், இந்த ஆட்டத்தை மிகுந்த நம்பிக்கையோடு சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்ளும். அதேநேரத்தில் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி சிறப்பாகவே விளையாடியிருந்தாலும், இந்த ஆட்டத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு களமிறங்கும்.

  8 பேட்ஸ்மேன்கள்: சென்னை அணியில் முரளி விஜய் மீண்டும் பார்முக்கு திரும்பியிருப்பது சென்னையின் பேட்டிங் வரிசைக்கு வலு சேர்த்துள்ளது. டெல்லிக்கு எதிராக சதமடித்த அவரின் அதிரடி, இந்த ஆட்டத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றில் விஜய் 52 பந்துகளில் 95 ரன்கள் ரன் சேர்த்தார். அதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு இப்போது அதிகரித்துள்ளது.

  மைக் ஹசி, தோனி, பிராவோ, ரெய்னா, ஜடேஜா என சென்னை அணியில் 8 பேட்ஸ்மேன்கள் உள்ளனர். கடந்த இரு ஆட்டங்களிலும் பின்வரிசையில் அதிரடியாக ரன் சேர்த்து சென்னையில் ரன் குவிப்பில் முக்கியப் பங்கு வகித்தார் பிராவோ.  

  பெüலிங்கில் வேகப்பந்து வீச்சை பென் ஹில்பெனாஸ், அல்பி மோர்கல், பிராவோ, அஸ்வின், ஜடேஜா, ஜகாதி கூட்டணி கவனிக்கிறது. கடந்த இரு ஆட்டங்களிலும் வலுவான ஸ்கோரை எடுத்து வெற்றி பெற்றதால், இந்த ஆட்டத்தில் அதே அணியே விளையாடும். வீரர்களில் மாற்றம் இருக்காது என்று தெரிகிறது.

  தோனி "சென்டிமென்ட்' பார்க்கக்கூடும் என்பதால் இந்த ஆட்டத்திலும் டூபிளெஸ்ஸிஸýக்கு வாய்ப்பு கிடைக்காது. மைக் ஹசியே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  கம்பீரின் பலம்: கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை அதன் கேப்டன் கம்பீர் தொடக்க வரிசையில் அபாரமாக ஆடி வருகிறார். இதுவரை 16 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர், 6 அரை சதங்களுடன் 588 ரன்கள் குவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற சூப்பர் கிங்ஸýக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அவர் அரைசதமடித்து கொல்கத்தாவுக்கு வெற்றி தேடித்தந்துள்ளார்.

  பிரென்டன் மெக்கல்லம், காலிஸ், யூசுப் பதான், மனோஜ் திவாரி, லட்சுமி சுக்லா என அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். கம்பீர், மெக்கல்லம், யூசுப் பதான், காலிஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடும்பட்சத்தில் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர்கள். அவர்கள் அடிக்கத் தொடங்கிவிட்டால் அவர்களை கட்டுப்படுத்துவது கடினமே.

  இருப்பினும் காலிஸ், மெக்கலம் ஆகியோர் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறி வருகின்றனர். டெல்லிக்கு எதிரான பிளே ஆஃப் சுற்றில் கடைசிக் கட்டத்தில் களம் புகுந்த யூசுப் பதான், 21 பந்துகளில் 40 ரன்கள் குவித்து ஆட்டத்தை டெல்லியிடம் இருந்து பறித்தது குறிப்பிடத்தக்கது.

  சுனில் நரைன் சவால்: பெüலிங்கைப் பொறுத்தவரையில் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் அந்த அணியின் முக்கிய துருப்புச் சீட்டாகத் திகழ்கிறார். இதுவரை 14 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் 2-வது இடத்தில் உள்ளார். எனவே இந்த ஆட்டத்திலும் அவர் சிறப்பாக பந்துவீசி சென்னை பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தக்கூடும். பிரெட் லீ, பாலாஜி, காலிஸ், இக்பால் அப்துல்லா ஆகியோரும் பந்துவீச்சில் பலம் சேர்க்கின்றனர்.

  இரு அணிகளுமே பேட்டிங், பெüலிங், ஆல்ரவுண்டர்கள் என சமபலம் வாய்ந்த அணியாக உள்ளன. முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ள கொல்கத்தா, எப்படியாவது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற போராடும். அதேநேரத்தில் சூப்பர் கிங்úஸô ஹாட்ரிக் பட்டத்தை வெல்ல போராடும் என்பதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது.

  டாஸ் வென்றால் பேட்டிங்: இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிளே ஆஃப் சுற்றுகளில் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி கண்டுள்ளன.

  இதுமட்டுமின்றி சென்னையில் நடந்த அரையிறுதியிலும் முதலில் பேட் செய்த சென்னையே வெற்றி கண்டுள்ளது. சென்னை மைதானத்தைப் பொறுத்தவரையில் முதல் பாதியில் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்பதால், வெற்றியில் டாஸýம் முக்கியப் பங்கு வகிக்கும்.

  இதுமட்டுமின்றி, இதற்கு முன்னர் சாம்பியன் பட்டம் வென்ற இரு முறையுமே, சென்னை அணி டாஸ் வென்று பேட்டிங்கையே தேர்வு செய்துள்ளது. அதனால் இந்த ஆட்டத்திலும் டாஸ் வென்றால் நிச்சயம் பேட்டிங்கையே தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  kattana sevai