சுடச்சுட

  
  spt4

  மெல்போர்ன், மே 25: 35 வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் 38-வயது வரை அணியில் இருந்தார். கிளார்க்குக்கு முன்பு கேப்டனாக இருந்த பாண்டிங், இப்போது தனது 37-வது வயதிலும் கிரிக்கெட் விளையாடி வருகிறார்.

  31 வயதாகும் கிளார்க் சமீபத்தில்தான் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து ஆஸ்திரேலிய பத்திரிகையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: எனது திருமண வாழ்க்கையும், கிரிக்கெட் வாழ்க்கையும் ஆசிர்வதிக்கப்பட்டதாகவே உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்காக தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவது மகிழ்ச்சிகரமான அனுபவம் ஆனால், 35 வயதுக்கு மேலும் தொடர்ந்து அணியில் நீடிக்க எனக்கு விருப்பமில்லை.

  ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் குறுகிய காலத்திலேயே எனது முத்திரையைப் பதித்துவிட்டு, ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்பதுதான் எனது ஆசை. ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்பதைத்தான் விரும்புகிறேன். ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருக்கும் போதே ஓய்வு பெற்றுவிடுவேன். எனினும் அடுத்த சில ஆண்டுகளில், அணியை தொடர்ந்து வெற்றிப்பாதையில் வழிநடத்துவது குறித்து சில திட்டங்களை வைத்துள்ளேன். அதற்காக முழுமூச்சுடன் பணியாற்றுவேன் என்றார் கிளார்க்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai