சுடச்சுட

  

  கரூர், மே 26: கரூரில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டியின் ஆடவர் பிரிவு இறுதிச்சுற்றுக்கு டேராடூன் ஓஎன்ஜிசி அணி முன்னேறியுள்ளது.

  மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் எல்ஆர்ஜி நாயுடு நினைவு சுழற்கோப்பைக்கான 54-வது ஆடவர் கூடைப்பந்து மற்றும் கேசிபி இந்திராணி நினைவு சுழற்கோப்பைக்கான 4-வது மகளிர் கூடைப்பந்து போட்டிகள் கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

  சனிக்கிழமை மாலை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் டேராடூன் ஓஎன்ஜிசி அணி 61-50 என்ற கணக்கில் சென்னை வருமான வரித்துறை அணியைத் தோற்கடித்தது.

  முன்னதாக, வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற மகளிர் பிரிவு போட்டியில் சென்னை தெற்கு ரயில்வே அணி 39-20 என்ற கணக்கில் கொல்கத்தா கிழக்கு ரயில்வே அணியை தோற்கடித்தது. ஆடவர் பிரிவில் டேராடூன் ஓஎன்ஜிசி அணி 59-46 என்ற கணக்கில் திருவனந்தபுரம் கேஎஸ்இபி அணியை வீழ்த்தியது. தில்லி ராணுவ அணி 74-65 என்ற கணக்கில் பெங்களூர் விஜயா வங்கி அணியை வீழ்த்தியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai