சுடச்சுட

  

  மாஸ்கோ, மே 26: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், இஸ்ரேலின் போரிஸ் கெல்ஃபான்ட் இடையிலான 11-வது சுற்றும் டிராவில் முடிந்துள்ளது.

  இன்னும் ஒரு சுற்று மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இருவருக்குமிடையிலான டிரா தொடர்வதால் உலக செஸ் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இப்போது இருவரும் 5.5 புள்ளிகளைப் பெற்று சமநிலையில் உள்ளனர்.

  ஒருவேளை அடுத்த சுற்றும் டிராவில் முடிந்தால், இருவரும் 6-6 என்ற கணக்கில் சமநிலையை எட்டுவர். அப்போது வெற்றியைத் தீர்மானிக்க டை பிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்படும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai