சுடச்சுட

  spt3

  பாரீஸ், மே 26: கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

  ஜூன் 10 வரை நடைபெறும் இப்போட்டியில் பல்வேறு சாதனைகளும் காத்திருக்கின்றன. நடப்புச் சாம்பியனான ஸ்பெயினின் ரஃபேல் நடால், 7-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் களம் காண்கிறார்.

  ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரோஜர் ஃபெடரர், ஜோகோவிச் ஆகியோர் அரையிறுதியில் மோத வாய்ப்புள்ளது. ரஃபேல் நடால், ஆன்டி முர்ரே ஆகியோர் மற்றொரு அரையிறுதியில் மோதுவதற்கான வாய்ப்புள்ளது.

  நடால், ஜோகோவிச் இருவரும் புதிய சாதனைக்காக காத்திருக்கிறார்கள். ஒருவேளை இருவரும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில் கடும் சவால் இருக்கும்.

  மற்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் நடாலை ஜோகோவிச் வீழ்த்தியிருந்தாலும், பிரெஞ்ச் ஓபன் நிச்சயம் அவருக்கு கடும் சவாலாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  ஏனெனில் களிமண் ஆடுகளங்களில் நடால் எப்போதுமே சிறப்பாக ஆடக்கூடியவர். பல்வேறு போட்டிகளில் நடாலை வீழ்த்தியிருந்தபோதும், சமீபத்தில் நடைபெற்ற மாட்ரிட், ரோம் போன்ற களிமண் ஆடுகள போட்டிகளில் நடாலிடம் ஜோகோவிச் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

  மகளிர் பிரிவு ஆட்டங்களில் நடப்புச் சாம்பியன் சீனாவின் லீ நா, ரஷியாவின் மரியா ஷரபோவா, முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் விக்டோரியா அசெரன்கா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகளிடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவில் இருந்து லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, ரோஹன் போபண்ணா பங்கேற்கிறார்கள்.

  சாதிப்பாரா ஜோகோவிச்?

  7-வது பட்டம் வெல்வாரா நடால்?

  பிரெஞ்ச் ஓபனில் ஸ்வீடனின் முன்னாள் வீரரான ஜார்ன் போர்க், இப்போதைய 2-ம் நிலை வீரரான ரஃபேல் நடால் ஆகியோர் அதிகபட்சமாக 6 முறை பட்டம் வென்றுள்ளனர்.

  இந்த முறை பட்டம் வெல்லும்பட்சத்தில் போர்க்கின் சாதனையை தகர்ப்பதோடு, பிரெஞ்ச் ஓபனில் 7 முறை பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையையும் படைப்பார் நடால்.

  இதுமட்டுமின்றி அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்களின் வரிசையிலும் மூன்றாவது இடத்துக்கு முன்னேறிவிடுவார் நடால்.

  10 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் 4-வது இடத்தில் உள்ளார் நடால். அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் வரிசையில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 16 பட்டங்களுடன் முதலிடத்திலும், அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ் (14 பட்டங்கள்), ஸ்வீடனின் ஜார்ன் போர்க் (11) மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 2005 முதல் 2011 வரை நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் போட்டிகளில் 6 முறை நடாலே பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். 2009-ல் மட்டுமே ரோஜர் ஃபெடரர் பட்டம் வென்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai