சுடச்சுட

  

  திருச்சி, மே 26 : மாநில அளவிலான பூப்பந்துப் போட்டிகள் திருச்சியில் சனிக்கிழமை தொடங்கின.

  திருச்சி ராக்போர்ட் பூப்பந்துக் குழு, பழனி பூப்பந்துக் குழு ஆகியவற்றின் சார்பில் 3-வது ஆண்டாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் முதல் பட்டாலியன் மைதானத்தில் போட்டிகளை முதல் பட்டாலியன் கட்டளை அதிகாரி சி. ஜயபாலன் தொடக்கி வைத்தார்.

  இப்போட்டியில் ராஜகிரி, வடமலையான், காஞ்சிபுரம், கோவில்பட்டி, சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், ஜோலார்பேட்டை, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் சுற்றில் வெற்றி கண்ட அணிகள் காலிறுதியில் விளையாடின. காலிறுதியில் திண்டுக்கல் ஆர்.ஆர்.சி. அணி 29-17, 19-17 என்ற செட் கணக்கில் நஞ்சுண்டபுரம் அணியை வென்றது. காஞ்சிபுரம் ஃபிரண்ட்ஸ் அணி 29-18, 29-17 என்ற செட் கணக்கில் ராஜகிரி அணியையும், பழனி பூப்பந்துக் குழு "பி' அணி 29-17, 29-14 என்ற செட் கணக்கில் கோவை சோயாஸ் சக்தி அணியையும் வென்றன. அரையிறுதி ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 27) நடைபெறுகின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai