சுடச்சுட

  

  இபோ (மலேசியா), மே 27: மலேசியாவில் நடைபெற்று வரும் சுல்தான் அஸ்லான்ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் நியூஸிலாந்து அணி தொடர்ந்து 3-வது வெற்றியைப் பெற்றுள்ளது.

  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை 1-3 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து வென்றது. இந்த ஆட்டத்தில் கோல் அடிக்கக் கிடைத்த சில சிறப்பான வாய்ப்புகளை பாகிஸ்தான் வீரர்கள் பயன்படுத்தத் தவறிவிட்டனர்.

  முன்னதாக இந்தியாவையும், ஆர்ஜென்டீனாவையும் நியூசிலாந்து தோற்கடித்தது.

  இந்த வெற்றிகளின் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன், அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் அதிகரித்துக் கொண்டுள்ளது.

  முன்னதாக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இந்திய அணி தென்கொரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai