சுடச்சுட

  

  உலக யோகா சாம்பியன்ஷிப்: கும்மிடிப்பூண்டி சிறுவன் தங்கம் வென்றார்

  Published on : 20th September 2012 07:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt5

  கும்மிடிப்பூண்டி,மே 27: 20-20 உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த டி.பிரவீண்குமார் (13) இந்தியாவின் சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார்.

  கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தாமோதரன்-சகிலா தம்பதியின் மகன் டி.பிரவீண்குமார். 8-ம் வகுப்பு படிக்கும் இவர் கடந்த 4 ஆண்டுகளாக யோகா பயிற்சி பெற்று வருகிறார். மே 11 முதல் மே 19 வரை மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் 20-20 உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ரஷியா உள்பட 10-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 400 பேர் கலந்து கொண்டனர்.

  இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் பிரவீண்குமார் 9-16 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் பங்கு பெற்றார். மலேசியா நாட்டில் நடைபெற்ற முதல் சுற்றில் வெற்றி பெற்ற பிரவீண்குமார், தொடர்ந்து சிங்கப்பூரில் நடைபெற்ற அடுத்த சுற்றில் வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். தாய்லாந்தில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் அதிக புள்ளிகளை பெற்ற அவர் சாம்பியன் பட்டம் வென்றார். தங்கப்பதக்கத்துடன் நாடு திரும்பிய பிரவீண்குமார், தனது வெற்றி குறித்துக் கூறியது: 20-20 யோகா என்பது 2 நிமிடத்தில் 20 யோகாசனங்களை செய்து காட்டும் போட்டி. எனது யோகா பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பயிற்சியும், பெற்றோர் அளித்த ஊக்கமும் என்னை தங்கப் பதக்கம் பெற வைத்தது என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai