சுடச்சுட

  

  ஐபிஎல் மீது பொறாமை கொண்டவர்கள் தடைகோருகின்றனர்: ராஜீவ் சுக்லா

  Published on : 20th September 2012 07:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt3

  புது தில்லி, மே 27: ஐபிஎல் போட்டிக்கு மக்களிடையே உள்ள ஆதரவால் பொறாமையடைந்துள்ள சிலர் அதனை தடை செய்ய வேண்டுமென்று கூறுகின்றனர் என்று ஐபிஎல் ஆணையரும், மத்திய அமைச்சருமான ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.

  இது தொடர்பாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியது: ஐபிஎல் விதிமுறைகளை அடுத்த ஆண்டில் சிறிது மாற்றி அமைக்க இருக்கிறோம். அதன்படி அனைத்து இந்திய கிரிக்கெட் வீரர்களும் ஏலத்துக்கு வருவார்கள்.

  பொதுவாக நன்கு பிரபலமான வீரர்கள் மட்டுமே அணி உரிமையாளர்களால் ஏலத்துக்கு எடுக்கப்படுகிறார்கள் என்ற கருத்து உள்ளது. அடுத்த ஆண்டு முதல் பெரிய அளவில் பிரபலமாக வீரர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்றார். ஐபிஎல் போட்டியைத் தடை செய்ய வேண்டுமென்று சிலர் கூறுவதற்கு பொறாமைதான் காரணம். மக்களிடையே ஐபிஎல் போட்டிக்கு உள்ள வரவேற்பையும், ஆதரவையும் சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எம்.பி.க்களில் ஒரு சிலர்தான் இதுபோன்ற கருத்தைக் கூறியுள்ளனர். அதுவே நாடாளுமன்றத்தின் ஒட்டுமொத்தக் கருத்தாகிவிடாது என்றார்.

  ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால்தான் தனக்கு பிசிசிஐ அளிக்கும் நிதியுதவி கிடைக்கவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கீர்த்தி ஆஸôத் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, "கடந்த 6 ஆண்டுகளாக பிசிசிஐ அளிக்கும் ஓய்வூதியத்தை கீர்த்தி ஆஸôத் பெற்று வருகிறார். ஐபிஎல் போட்டியில் கறுப்புப் பணம் புழங்குவதாக அவர் தொடர்ந்து குற்றம்சாட்டியதை அடுத்து உள்ளூர் கிரிக்கெட் வாரியம் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தது' என்று ராஜீவ் சுக்லா விளக்கமளித்தார். பிசிசிஐ அமைப்பில் அரசியல்வாதிகள் அதிகாரத்தில் இருப்பதால்தான் முறைகேடுகள் நடைபெறுகிறது என்று கூறப்படுவதற்கு பதிலளித்த அவர், இந்திய ஹாக்கி கூட்டமைப்பு கே.பி.எஸ்.கில் தலைமையில் செயல்படுகிறது. அவர் அரசியல்வாதி அல்ல. அப்படியிருக்கும்போது ஹாக்கி விளையாட்டு நமது நாட்டில் எந்த அளவுக்கு மோசமான சரிவைச் சந்தித்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.

  கிரிக்கெட்டில் முறைகேடு என்பதை பிசிசிஐயும், ஐபிஎல் அமைப்பும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. ஸ்பாட் பிக்ஸிங் குற்றச்சாட்டுக்கு உள்ளான 5 வீரர்களையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்துள்ளோம்.

  அரசிடம் இருந்து பிசிசிஐ எந்த நிதியுதவியும் பெறவில்லை. இருந்தபோதிலும் தகுந்த சட்டத்திருத்தங்கள் கொண்டு வந்தால் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் வரத்தயாராக இருக்கிறோம் என்றார் ராஜீவ் சுக்லா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai