சுடச்சுட

  

  ரெய்னா விளாசல்: நைட் ரைடர்ஸூக்கு 191 ரன்கள் இலக்கு

  By ஏ.வி.பெருமாள்  |   Published on : 20th September 2012 07:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt2

  சென்னை, மே 27: ஐபிஎல் போட்டி இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸூக்கு 191 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

  முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. ரெய்னா 38 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் குவித்தார்.

  சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பேட்டிங்கைத் தேர்வு செய்ய முரளி விஜயும், மைக் ஹசியும் சூப்பராக கிங்ஸின் இன்னிங்ûஸத் தொடங்கினர்.

  தொடக்கம் சூப்பர்: முதல் 3 ஓவர்களில் 17 ரன்கள் எடுத்தது சென்னை. ஷகிப் அல்ஹசன் வீசிய 4-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸரையும், 3-வது பந்தில் பவுண்டரியையும் மைக் ஹசி விரட்ட, அந்த ஓவரில் மட்டும் 14 ரன்கள் கிடைத்தன. ஆனால் 5-வது ஓவரை வீசிய சுனில் நாரயண் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

  பிரெட் லீ வீசிய 6-வது ஓவரை எதிர்கொண்ட முரளி விஜய் முதல் பந்தில் சிக்ஸரையும், 3-வது பந்தில் பவுண்டரியையும் விரட்டினார். 5-வது பந்தில் மைக் ஹசி ஒரு சிக்ஸர் அடிக்க 6 ஓவர்கள் முடிவில் 54 ரன்களை எட்டியது சூப்பர் கிங்ஸ். அந்த அணி 87 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. ரஜத் பாட்டியா வீசிய 11-வது ஓவரின் 2-வது பந்தை தூக்கியடித்தார் விஜய். அதை எல்லையில் நின்ற ஷகிப் அல்ஹசன் பாய்ந்து பிடிக்க 42 ரன்களில் வெளியேறினார் விஜய். 32 பந்துகளைச் சந்தித்த அவர் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார்.

  இதையடுத்து ஹசியுடன் இணைந்தார் ரெய்னா. அவர் வந்த வேகத்தில் காலிஸ் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க 100 ரன்களைக் கடந்தது சென்னை. இதனிடையே 38 பந்துகளில் அரைசதம் கண்டார் மைக் ஹசி.

  ரெய்னா அதிரடி: பதான் வீசிய 14-வது ஓவரை எதிர்கொண்ட ரெய்னா ஒரு சிக்ஸரையும், இரண்டு பவுண்டரிகளையும் விளாசினார். இதனால் அந்த ஓவரில் 17 ரன்கள் கிடைத்தது.

  பிரெட் லீ வீசிய 16-வது ஓவரில் ஒரு சிக்ஸரை விளாசிய ரெய்னா, சுனில் நாரயண் வீசிய 17-வது பந்தில் சிக்ஸர் அடித்து அரைசதம் கண்டார். அவர் 27 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் அரைசதமடித்தார். இதனால் 17 ஓவர்கள் முடிவில் 160 ரன்களை எட்டியது சூப்பர் கிங்ஸ்.

  காலிஸ் வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார் மைக் ஹசி. 43 பந்துகளைச் சந்தித்த ஹசி 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து களம் புகுந்த தோனி, காலிஸின் பந்துவீச்சில் அதிரடியாக இரு பவுண்டரிகளை விளாசினார். ஆட்டத்தின் கடைசிப் பந்தில் ரெய்னா ஆட்டமிழக்க 3 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது சூப்பர் கிங்ஸ். ரெய்னா 73 ரன்கள் எடுத்தார். தோனி 9 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

  கொல்கத்தா தரப்பில் பிரெட் லீ அதிகபட்சமாக 4 ஓவர்களில் 42 ரன்களை வாரி வழங்கினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொல்கத்தா பந்து வீச்சாளர் சுனில் நாராயணால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை.

  பிரபலங்கள்: போட்டியைக் காண ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் வந்திருந்தனர். நடிகர்கள் அக்ஷய் குமார், பிரபு தேவா உள்ளிட்டோரும் மைதானத்திற்கு வந்திருந்தனர்.

  களைகட்டிய மைதானம்:மைதானத்தில் சீல் வைக்கப்பட்டிருந்த கேலரிகள் நீதிமன்ற அனுமதியின்பேரில் கடந்த ஆட்டத்திலேயே திறக்கப்பட்டாலும், முழுவதும் நிரம்பவில்லை. ஆனால் இறுதிப் போட்டிக்கு அந்த கேலரிகள் உள்ளிட்ட மைதானத்தின் அனைத்துப் பகுதிகளும் நிரம்பி வழிந்தன.

  சென்னை அணிக்கு ஆதரவாக ரசிகர்கள் எழுப்பிய உற்சாகக் குரல் விண்ணை முட்டியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai