சுடச்சுட

  

  இபோ (மலேசியா), மே 28: மலேசியாவில் நடைபெற்று வரும் சுல்தான் அஸ்லான்ஷா ஹாக்கி போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி மலேசியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

  இதுவரை 4 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள இந்திய அணி இரு வெற்றிகளைப் பெற்றுள்ளது. புள்ளிகள் பட்டியலில் நியூசிலாந்து, ஆர்ஜென்டீனாவுக்கு அடுத்தபடியாக 6 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இந்தியா உள்ளது. மொத்தம் 7 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.

  முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. முதல் பாதியில் கோல் அடிக்க சில சிறப்பான வாய்ப்புகளை இந்திய வீரர்கள் தவறவிட்டதால் தோல்வி தவிர்க்க முடியாததாயிற்று.

  முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்த இந்திய அணி, அடுத்த ஆட்டத்தில் தென் கொரியாவை வென்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai