சுடச்சுட

  

  ரோம், மே 28: கால்பந்து விளையாட்டில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக இத்தாலியில் 14 வீரர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

  ரோமில் உள்ள தேசிய கால்பந்து பயிற்சி மையத்துக்கு இரு வாகனங்களில் வந்த போலீஸார் லாசியோ கிளப் அணியின் கேப்டன் ஃபிளாரன்ஸ் உள்ளிட்ட 14 வீரர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். மேட்ச் பிக்ஸிங்கில் மேலும் பல வீரர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

  செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் தடுப்பாட்ட வீரர் டோமினிகோ கிறிஸ்டிஸ்டோ ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கில் பங்கேற்கும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது. எனவே அவரும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

  இது தவிர கால்பந்து அணியின் பயிற்சியாளர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களது வீடுகளும் சோதனையில் இருந்து தப்பவில்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai