சுடச்சுட

  
  spt6

  கரூர், மே 28: கரூரில் நடைபெற்று வந்த அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் டேராடூன் ஓ.என்.ஜி.சி. அணியும், பெண்கள் பிரிவில் தெற்கு ரயில்வே அணியும் சாம்பியன் கோப்பைகளைக் கைப்பற்றின.

  கரூர் மாவட்டக் கூடைப்பந்தாட்டக் கழகம் சார்பில் எல்ஆர்ஜி நாயுடு நினைவு சுழற்கோப்பைக்கான 54-வது அகில இந்திய கூடைப்பந்து, கேசிபி இந்திராணி நினைவு சுழற்கோப்பைக்கான 4-வது அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டிகள் கரூர் திருவள்ளுவர் விளையாட்டரங்கில் கடந்த 21 ஆம் தேதி முதல் நடைபெற்றன.

  ஆண்கள் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில், லோனாவில்லா இந்தியக் கடற்படை அணியுடன் டேராடூன் ஓஎன்ஜிசி அணி மோதியது. ஆட்ட முடிவில் கடற்படை அணியை 59-29 என்ற புள்ளிக்கணக்கில் டேராடூன் ஓஎன்ஜிசி அணி வீழ்த்தியது. 3-வது இடத்தை தில்லி ராணுவ அணியும், 4-வது இடத்தை வருமானவரித் துறை அணியும் பிடித்தன.

  பெண்கள் பிரிவில் பிலாஸ்பூர் தென்கிழக்கு மத்திய ரயில்வே அணியை 63-47 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது சென்னை தெற்கு ரயில்வே அணி. இந்த அணியின் பார்த்திநேதன் 13 புள்ளிகளையும், சீமாசிங் 9 புள்ளிகளையும், கவிதா 11 புள்ளிகளையும் அணிக்குப் பெற்றுத் தந்தனர். செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணி 3-வது இடத்தையும், கொல்கத்தா கிழக்கு ரயில்வே அணி 4-வது இடத்தையும் பிடித்தன.

  பரிசளிப்பு விழாவிற்கு கரூர் கூடைப் பந்தாட்டக் கழகத் தலைவர் வி.என்.சி. பாஸ்கர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ். ஜனார்த்தனன், இந்திரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கரூர் வைஸ்யா வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் கே. வெங்கட்ராமன், அரவக்குறிச்சி எம்எல்ஏ கே.சி. பழனிசாமி ஆகியோர் சாம்பியன் கோப்பையை வழங்கினர்.

  விழாவில் தொழிலதிபர் நாச்சிமுத்து, முன்னாள் அதிமுக மாவட்டச் செயலர் சாகுல் ஹமீது, கூடைப்பந்தாட்டக் கழகச் செயலர் எம். முகமது கமாலுதீன், நிர்வாகிகள் ஆர். வெங்கேடசன், அமீன், ஏ. பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai