சுடச்சுட

  
  spt8

  நாட்டிங்ஹாம், மே 28: மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரையும் இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது. 3 டெஸ்ட்களை கொண்ட இத்தொடரில் முதல் இரு டெஸ்ட்களில் மேற்கிந்தியத்தீவுகள் தோல்வியடைந்துவிட்டது.

  நாட்டிங்ஹாமில் மே 25-ம் தேதி தொடங்கிய 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற மேற்கிந்தியத்தீவுகள் முதலில் பேட் செய்தது. தொடக்கத்தில் தடுமாறினாலும் பின்வரிசையில் சாமுவேல்ஸ், கேப்டன் சமி ஆகியோர் சதமடித்ததால், முதல் இன்னங்ஸில் மேற்கிந்தியத்தீவுகள் 370 ரன்கள் குவித்தது.

  அடுத்து விளையாடிய இங்கிலாந்து 428 ரன்கள் எடுத்து 3-வது நாளில் ஆல் அவுட் ஆனது. கேப்டன் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் சதமடித்தார்.

  பின்னர் 2-வது இன்னிங்ûஸ தொடங்கிய மேற்கிந்தியத்தீவுகளால் இங்கிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால் 165 ரன்களுக்கு சுருண்டது. இதனால் 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, ஆட்டத்தின் 4-வது நாளில் ஒரு விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

  முன்னதாக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டிலும் இங்கிலாந்து வென்றது.

  இரு இன்னிங்ஸ்களிலும் தலா 4 விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்தின் மிதவேகப்பந்து வீச்சாளர் டிம் பிரெஸ்னன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 3-வது டெஸ்ட் பெர்மிங்ஹாமில் ஜூன் 7-ம் தேதி தொடங்குகிறது.

  சுருக்கமான ஸ்கோர்

  மேற்கிந்தியத்தீவுகள்

  (முதல் இன்னிங்ஸ் 370 ஆல் அவுட்)

  (சாமுவேல்ஸ் 117, சமி 106,

  பிரெஸ்னன் 4வி/104)

  (இரண்டாவது இன்னிங்ஸ்

  165 ஆல் அவுட்)

  (சாமுவேல்ஸ் 76*, சமி 25,

  பிரெஸ்னன் 4வி/37)

  இங்கிலாந்து

  (முதல் இன்னிங்ஸ் 428 ஆல் அவுட்)

  (ஸ்டிராஸ் 141, பீட்டர்சன் 80,

  ராம்பால் 3வி/75)

  (இரண்டாவது இன்னிங்ஸ்

  ஒரு விக்கெட் இழப்புக்கு 111)

  (ஸ்டிராஸ் 45, குக் 43*

  சாமுவேல்ஸ் 1/18)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai