சுடச்சுட

    

    நைட் ரைடர்ஸ் அணிக்கு கொல்கத்தாவில் இன்று பிரமாண்ட வரவேற்பு

    Published on : 20th September 2012 07:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொல்கத்தா, மே 28: ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அங்குள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வீரர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெறவுள்ளது. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அணியின் உரிமையாளர் ஷாருக் கான் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர்.

    நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வாகனம் ஒன்றில் சுமார் 6 கி.மீ. தூரம், ரசிகர்கள் புடைசூழ ஊர்வலமாக அழைத்து வரப்பட இருக்கின்றனர்.

    தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரைப்பட நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கு அனைவருக்குமே அனுமதி இலவசம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai