சுடச்சுட

  
  spt5

  பாரீஸ், மே 28: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் விளையாட முதல்நிலை வீராங்கனையான பெலாரஸின் விக்டோரியா அசெரென்கா, நடப்பு சாம்பியன் சீனாவின் லீ நா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

  ஆடவர் பிரிவில் முன்னிலை வீரர்கள் செர்பியாவின் ஜோகோவிச், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

  தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அசெரன்காவுக்கு முதல் சுற்றே நெருக்கடியாக அமைந்தது. கடும் போராட்டத்துக்குப்பின் இத்தாலியின் ஆல்பெர்டாவை 6-7(6/8), 6-4,6-2 என்ற செட் கணக்கில் அசரென்கா வென்றார்.

  லீ நா ருமெனியாவின் சோரானா கிறிஸ்டியாவை 6-2,6-1 என்ற செட் கணக்கில் எளிதாக வென்றார்.

  தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ரஷிய வீராங்கனை வெரா ஸ்வெனரேவா போட்டியில் இருந்து விலகினார்.

  ஆடவர் பிரிவு: செர்பியாவின் ஜெலினா ஜான்கோவிச், செக் குடியரசின் பெட்ரா செட்கோவெஸ்கா, அமெரிக்காவின் கிறிஸ்டினா, ரஷியாவின் நாடியா பெட்ரோவா உள்ளிட்டோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.

  ஆடவர் பிரிவில் பெடரர் ஜெர்மனியின் தாமஸ் கெம்கியை எதிர் கொண்டார். இதில் 6-2,7-5, 6-3 என்ற செட் கணக்கில் பெடரர் வென்றார். ஜோகோவிச் இத்தாலியின் பொட்டிடோ ஸ்டிராûஸ 7-6 (7/3), 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

  இவர்கள் தவிர அமெரிக்காவின் ஜான் இஸ்னர், ரஷியாவின் கெவின் ஆண்டர்சன் உள்ளிட்டோரும் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai