சுடச்சுட

  
  spt3

  பிரெஸல்ஸ் (பெல்ஜியம்) மே 28: பெல்ஜியத்தில் நடைபெற்று வந்த பிரெஸல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பெத்தானியா மேட்டக் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.

  பிரெஸல்ஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சானியா - பெத்தானியா ஜோடி, போலந்தின் அலிஸ்ஜா, சீனாவின் ஜிஹெங் ஜி ஜோடியை எதிர்கொண்டது. 1 மணி நேரம் 10 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 6-3,6-2 என்ற செட் கணக்கில் சானியா ஜோடி வெற்றி பெற்றது.

  இந்த சீசனில் சானியா மிர்சா வெல்லும் 2-வது சர்வதேச பட்டம் இது. ஒட்டுமொத்தமாக 14 சர்வதேச பட்டங்களை அவர் வென்றுள்ளார்.

  முன்னதாக 2009-ம் ஆண்டில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியிலும் சானியா - பெத்தானியா ஜோடி பட்டம் வென்றுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai