சுடச்சுட

    

    ஜயங்கொண்டம், மே 28: அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் ஆல்வின் கிரிக்கெட் கழகம் சார்பில் நடைபெற்ற 26-ஆம் ஆண்டு மாநில கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி முதலிடம் பெற்றது.

    ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மே 21 முதல் நடைபெற்ற மாநில கிரிக்கெட் இப்போட்டியில் சென்னை அணி முதலிடத்தையும், புதுச்சேரி அணி இரண்டாம் இடத்தையும், தூத்துகுடி மற்றும் கோவை அணிகள் மூன்றாம் இடத்தையும் பெற்றன.

    முதல் பரிசான ரூ 25,000-த்தை பெரம்பலூர் கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து, ஆல்வின் கிரிக்கெட் கழகம் சென்னை அணிக்கு வழங்கியது. இரண்டாம் பரிசான ரூ. 15,000-த்தை ஜயங்கொண்டம் நேஷனல் கல்வி நிறுவனத் தாளாளர் சிலம்புச்செல்வன் புதுச்சேரி அணிக்கு வழங்கினார். மூன்றாம் பரிசான தலா ரூ 10,000-த்தை கோவை மற்றும் தூத்துக்குடி அணிகள் பெற்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai