சுடச்சுட

  
  spt2

  மும்பை, மே 28: மும்பை கிரிக்கெட் மைதானத்தில் குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டதற்காக நடிகர் ஷாருக் கான், மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

  அதனை ஏற்று, மும்பை வான்கடே மைதானத்தில் நுழைய அவருக்கு விதிக்கப்பட்டுள்ள 5 ஆண்டு கால தடையை நீக்குவது குறித்து மும்பை கிரிக்கெட் சங்கம் பரிசீலித்து வருகிறது.

  முன்னதாக ஐபிஎல் போட்டியில் மும்பை - கொல்கத்தா அணிகள் மோதிய போட்டி முடிந்தபின், குடித்து விட்டு மைதானத்துக்கு வந்த கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக்கான், மைதான அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து மும்பை மைதானத்துக்குள் நுழைய அவருக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. "நான் குடித்துவிட்டு வரவில்லை. எனது குழந்தைகளிடம் பாதுகாப்பு பணியாளர்கள் கடுமையாக நடந்து கொண்டதால் ஆத்திரம் அடைந்தேன்' என்று அப்போது ஷாருக்கான் விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. அதன் பின்னர் பேசிய ஷாருக் கான், "மும்பை கிரிக்கெட் மைதானத்தில் நான் நடந்து கொண்ட விதத்துக்காக அனைத்து தரப்பினரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்' என்று தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai