சுடச்சுட

  

  இபோ (மலேசியா), மே 29: அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் புதன்கிழமை நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-ஆர்ஜென்டீனா அணிகள் மோதுகின்றன.

  2012-ம் ஆண்டுக்கான சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டி மலேசியாவின் இபோ நகரில் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆர்ஜென்டீனாவை சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் வென்றால் மட்டுமே இறுதிச்சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற இக்கட்டான சூழலில் இரு அணிகளும் களம் காண்கின்றன.

  இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள இரு அணிகளுமே இரு வெற்றி, இரு தோல்வி என 6 புள்ளிகளுடன் உள்ளன.

  இந்தியா கடந்த ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்குகிறது. அதேநேரத்தில் ஆர்ஜென்டீனா தனது கடைசி ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் பலம் வாய்ந்த பிரிட்டனை வீழ்த்தியுள்ளது. அதனால் மிகுந்த நம்பிக்கையோடு அந்த அணி, இந்தியாவை எதிர்கொள்ளும்.

  இந்திய அணி, இந்த ஆட்டத்தில் வெற்றிபெறுவதோடு, கடைசி லீக் ஆட்டத்தில் பரமவைரியான பாகிஸ்தானையும் வீழ்த்த வேண்டும். அவ்வாறு வெற்றி காணும் பட்சத்தில் எளிதாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறிவிடும். ஆனால் இரு அணிகளையும் வெற்றிகொள்ள இந்தியா கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai