சுடச்சுட

  
  spt8

  பாரீஸ், மே 29: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றுக்கு ரஷியாவின் மரியா ஷரபோவா, செக்.குடியரசின் பெட்ரா விட்டோவா ஆகியோர் முன்னேறியுள்ளனர். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் மரியா ஷரபோவா 6-0, 6-0 என்ற நேர் செட்களில் ருமேனியாவின் அலெக்ஸான்ட்ராவை வீழ்த்தி ஆட்டத்தை 48 நிமிடங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தார்.

  ஷரபோவா அடுத்த சுற்றில் ஜப்பானின் அயுமி மோர்டியாவை சந்திக்கிறார். மோர்டியா தனது முதல் சுற்றில் 3-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்லோவேனியாவின் போலோனா ஹெர்காக்கை வீழ்த்தினார்.

  ஷரபோவா மற்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளான ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் போட்டிகளில் பட்டம் வென்றிருந்தாலும், பிரெஞ்ச் ஓபனில் மட்டும் அரையிறுதி வரையே முன்னேறியுள்ளார். இந்த முறை பட்டம் வெல்லும் முனைப்போடு களம் கண்டுள்ள அவர், முதல் தடையைத் தாண்டியுள்ளார்.

  விட்டோவா வெற்றி: விம்பிள்டனின் நடப்புச் சாம்பியனான பெட்ரா விட்டோவா தனது முதல் சுற்றில் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் அஷ்லேயை வீழ்த்தினார்.

  2010-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான இத்தாலியின் பிரான்ஸ்செஸ்கா ஷியாவோனே 6-3, 6-1 என்ற நேர் செட்களில் ஜப்பானின் கிமிகோடேட்டை தோற்

  கடித்தார்.

  டேவிட் ஃபெரர் வெற்றி: தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் டேவிட் ஃபெரர் 6-3, 6-4, 6-1 என்ற நேர் செட்களில் ஸ்லோவேகியாவின் லூகாஸ் லேகோவை வெற்றி கண்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai