சுடச்சுட

  
  spt7

  நாட்டிங்காம், மே 29: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஜோடியான ஆன்ட்ரூ ஸ்டிராஸ்-அலாஸ்டர் குக் ஜோடி டெஸ்ட் போட்டியில் பார்ட்னர்ஷிப்பில் 5,000 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.

  பார்ட்னர்ஷிப்பில் 5 ஆயிரம் ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ள 5-வது ஜோடி இது. நாட்டிங்காமில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து.

  2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் தொடக்க வீரர்களாக களம்கண்ட ஸ்டிராஸ்-குக் ஜோடி 89 ரன்களை எடுத்தபோது பார்ட்னர்ஷிப் மூலம் 5 ஆயிரம் ரன்களை எடுத்த 5-வது ஜோடி என்ற பெருமையைப் பெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai