சுடச்சுட

  
  stump

  புது தில்லி, மே 31 : கிரிக்கெட் விளையாட்டில் ரன் எண்ணிக்கை மற்றும் விக்கெட்டுகள் அல்லாமல் சில சமயங்களில் மழையும் கூட வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கிறது.

  கிரிக்கெட் போட்டியின் போது மழை பெய்தால் மழை பெய்து ஆட்டம் தடை செய்யப்படும் போது ஒரு அணியின் ஓவர் மற்றும் ரன் எண்ணிக்கையை மற்றொரு அணி அந்த ஓவரில் எடுத்த ரன் எண்ணிக்கையை ஒப்பிட்டு அதிக ரன் எடுத்த அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கும் முறை தான் டக்வொர்த் லூயிஸ் விதியாகும்.

  ஆனால் இதை விட பன்மடங்கு சிறந்த, ஒரு போட்டியின் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ள அணியை தேர்வு செய்யும் வகையில் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வி ஜெயதேவன் கண்டுபிடித்துள்ள விதியை இனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்துவது குறித்து லண்டனில் நடைபெற உள்ள ஐசிசி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளது.

  இந்த விதிக்கு ஏஜேடி என்று ஜெயதேவன் பெயரிட்டுள்ளார். டக் வொர்த் லூயிஸ் விதியை நமது இந்திய பொறியாளரின் புதிய விதி மாற்றுமா என்பதை பார்க்கலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai