சுடச்சுட

  
  spt3

  பாரீஸ், மே 30: அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

  செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் செரினா 6-4, 6-7, 3-6 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 111-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் விர்ஜினியே ரெஸ்ஸôனேவிடம் தோல்வி கண்டார்.

  இதுவரை 47 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்றுள்ள செரினா, முதல்முறையாக முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்டுள்ளார்.

  1998-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் 2-வது சுற்றில் தனது சகோதரி வீனஸôல் வெளியேற்றப்பட்டதே கிராண்ட்ஸ்லாம் போட்டியில் செரினாவின் மோசமான தோல்வியாக இருந்தது.

  3-வது சுற்றில் அசரென்கா: புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டங்களில் பெலாரஸின் விக்டோரியா அசரென்கா 6-1, 6-1 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் டினாவையும், பிரான்ஸின் ஜோகன்ஸன் 7-6, 6-2 என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் முன்னணி வீராங்கனை பெட்ரா செட்கோவ்ஸ்காவையும், ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் இரினாவையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

  இதேபோல் செர்பியாவின் அனா இவானோவிச் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் இஸ்ரேலின் ஷாஹர் பீரை வீழ்த்தினார். ரஷியாவின் நடியா பெட்ரோவா, ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா ஆகியோரும் 2-வது சுற்றில் வெற்றி கண்டனர்.

  ஜோகோவிச், ஃபெடரர் வெற்றி: இதேபோல் ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 6-3, 6-2, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் அட்ரியானையும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-0, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்லோவேகியாவின் பிளாஸ் கேவ்சிச்சையும் வீழ்த்தினர்.

  செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச், ஆர்ஜென்டீனாவின் ஜுவன் மார்டின், குரேஷியாவின் மரின் சிலிச் ஆகியோர் வெற்றி கண்டு 3-வது சுற்றுக்கு முன்னேறினார். ஸ்பெயினின் முன்னணி வீரரான டேவிட் ஃபெரர் அதிர்ச்சி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai