Enable Javscript for better performance
கிளார்க் இரட்டைச் சதம்; ஆஸ்திரேலியா 482/5- Dinamani

சுடச்சுட

    

    கிளார்க் இரட்டைச் சதம்; ஆஸ்திரேலியா 482/5

    By dn  |   Published on : 23rd November 2012 05:10 AM  |   அ+அ அ-   |    |  

    22sptclar

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 482 ரன்கள் குவித்துள்ளது.

    அந்த அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் 224 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார்.

    இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் வியாழக்கிழமை தொடங்கியது. தென் ஆப்பிரிக்க அணியில் வெர்னான் பிலாண்டர் காயம் காரணமாக இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக கிளெய்ன்வெல்ட் சேர்க்கப்பட்டார்.

    அதிர்ச்சி தொடக்கம்: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். டேவிட் வார்னரும், எட் கோவனும் அந்த அணியின் இன்னிங்ûஸத் தொடங்கினர். கோவன் 10 ரன்களில் காலிஸ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த குய்னி ரன் ஏதுமின்றியும், ரிக்கி பாண்டிங் 4 ரன்களிலும் ஆட்டமிழக்க 13 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது ஆஸ்திரேலியா. 

    வார்னர்-கிளார்க் அதிரடி: இதையடுத்து வார்னருடன் இணைந்தார் கேப்டன் கிளார்க். இருவரும் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தியதோடு அதிரடியாக விளையாடி ரன் குவிக்கத் தொடங்கினர். வார்னர் 47 பந்துகளில் அரைசதம் கண்டார். மதிய உணவு இடைவேளையின்போது அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்திருந்தது.

    இதன்பிறகு மேலும் வேகமாக விளையாடிய வார்னர், இம்ரான் தாஹிர் வீசிய 31ஆவது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸரையும், அடுத்த பந்தில் பவுண்டரியையும் விளாசி 93 பந்துகளில் சதம் கண்டார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 3ஆவது சதம் இது.

    மோர்கல் வீசிய அடுத்த ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை விளாசிய கிளார்க் 57 பந்துகளில் அரைசதம் கண்டார். ஆஸ்திரேலியா 210 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. 112 பந்துகளைச் சந்தித்த வார்னர் 4 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் எடுத்து மோர்கல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    கிளார்க் சதம்: இதையடுத்து கிளார்க்குடன் இணைந்தார் மைக் ஹசி. இந்த ஜோடியும் தென் ஆப்பிரிக்க பெüலர்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. கிளார்க்கிற்கு இணையாக மைக் ஹசியும் வேகமாக விளையாடினார். இதனிடையே இம்ரான் தாஹிர் வீசிய 49ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்து சதத்தை நிறைவு செய்தார் கிளார்க்.

    அவரைத் தொடர்ந்து மைக் ஹசி 62 பந்துகளில் அரைசதம் கண்டார். மோர்கல் வீசிய 65ஆவது ஓவரில் 5 பவுண்டரிகளை விரட்டிய மைக்கேல் கிளார்க் 150 ரன்களைக் கடந்தார். இதனால் 72 ஓவர்களில் 400 ரன்களைக் கடந்தது ஆஸ்திரேலியா.

    இம்ரான் தாஹிர் வீசிய 82ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்த கிளார்க் இரட்டைச் சதத்தை எட்டினார். அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்து டெஸ்ட் போட்டியில் 18ஆவது சதத்தை நிறைவு செய்தார் மைக் ஹசி. அவர் 103 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்டெயின் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுக்க, முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 137 பந்துகளைச் சந்தித்த ஹசி 4 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார்.

    கிளார்க் 243 பந்துகளில் 1 சிக்ஸர், 39 பவுண்டரிகளுடன் 224 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்காவின் மோர்ன் மோர்கல் 22 ஓவர்களில் 128 ரன்களையும், இம்ரான் தாஹிர் 21 ஓவர்களில் 159 ரன்களையும் வாரி வழங்கினர். 2வது நாள் ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

    சாதனை ரன்: டெஸ்ட் போட்டியில் 13ஆவது முறையாக ஒரே நாளில் 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது ஆஸ்திரேலியா. 1910ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் இழப்புக்கு 494 ரன்கள் குவித்ததே ஆஸ்திரேலியா ஒருநாளில் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

    அடிலெய்டு டெஸ்டில் ஆஸ்திரேலியா இப்போது குவித்துள்ள 482 ரன்கள், 2000இல் சிட்னியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலியா எடுத்த 482 ரன்கள் ஆகியவை அந்த அணியால் ஒரேநாளில் எடுக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர்.

    தென் ஆப்பிரிக்க வீரர்கள் காயம்: தென் ஆப்பிரிக்க அணியில் வெர்னான் பிலாண்டர் காயம் காரணமாக இடம்பெறாத நிலையில், காலிஸ், ஸ்டெயின் ஆகியோரும் தசைப் பிடிப்பால் அவதிப்பட்டனர்.

    இதனால் அவர்கள் இருவரும் பீல்டிங்கில் இருந்து வெளியேறினர். எனினும் மீண்டும் களமிறங்கிய ஸ்டெயின், மைக் ஹசியை போல்டாக்கினார்.

    கிளார்க் சாதனை
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடர்ச்சியாக 2ஆவது இரட்டைச் சதத்தைப் பதிவு செய்துள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க். முன்னதாக முதல் டெஸ்டிலும் அவர் இரட்டைச் சதமடித்து அணியை தோல்வியிலிருந்து மீட்டார். அதேபோல் இந்த டெஸ்டிலும் அணியைச் சரிவிலிருந்து மீட்டுள்ளார். இதுதவிர ஒரே ஆண்டில் 4 இரட்டைச் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். கிரிக்கெட்டின் பிதாமகன் என்றழைக்கப்படும் டான் பிராட்மேன் உள்பட எந்த பேட்ஸ்மேனுமே ஒரே ஆண்டில் 4 இரட்டைச் சதங்களை விளாசியதில்லை.

    கிளார்க் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக உயர்ந்த பிறகே இந்த சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக கடந்த ஜனவரியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 329 ரன்களக் குவித்தார். அதே தொடரில் அடிலெய்டில் நடைபெற்ற 4ஆவது டெஸ்டில் 210 ரன்கள் குவித்து தொடர்நாயகன் விருதையும் வென்றார்.

    kattana sevai