Enable Javscript for better performance
387 ரன்கள் குவித்தது வங்கதேசம்- Dinamani

சுடச்சுட

    

    387 ரன்கள் குவித்தது வங்கதேசம்

    By dn  |   Published on : 23rd November 2012 05:09 AM  |   அ+அ அ-   |    |  

    22sptsamu

    மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 91.1 ஓவர்களில் 387 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

    இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் குவித்துள்ளது. சாமுவேல்ஸ் 109, டேரன் பிராவோ 85 ரன்களுடன் களத்தில் உள்ளனர். வங்கதேசத்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு மேற்கிந்தியத் தீவுகள் இன்னும் 146 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

    வங்கதேசத்தின் குல்னாவில் புதன்கிழமை தொடங்கிய இப்போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் 86 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 365 ரன்கள் எடுத்திருந்தது. அபுல் ஹசன் 100, மகமதுல்லா 72 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

    2ஆவது நாளான வியாழக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணியில் மஹமதுல்லா 76 ரன்களிலும், அபுல் ஹசன் 113 ரன்களிலும் ஆட்டமிழக்க வங்கதேசத்தின் முதல் இன்னிங்ஸ் 91.1 ஓவர்களில் 387 ரன்களில் முடிவுக்கு வந்தது.

    மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஃபிடல் எட்வர்ட்ஸ் 6 விக்கெட்டுகளையும், டேரன் சமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    மே.இ.தீவுகள் பதிலடி: இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் பாவெல் 13 ரன்களிலும், கிறிஸ் கெயில் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து டேரன் பிராவோவும், சாமுவேல்ஸýம் இணைந்தனர். இவர்கள் இருவரும் சிறப்பாக ஆடி

    அணியைச் சரிவிலிருந்து மீட்டனர்.

    தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சாமுவேல்ஸ், ஷகிப் அல்ஹசன் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து 5ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார்.

    இந்த ஆண்டில் அவர் அடிக்கும் 3ஆவது டெஸ்ட் சதம் இது. 2ஆவது நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் 2 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்துள்ளது. சாமுவேல்ஸ்-பிராவோ ஜோடி 3ஆவது விக்கெட்டுக்கு 198 ரன்கள் சேர்த்துள்ளது. வங்கதேசம் தரப்பில் சோஹாக் காஸி, ரூபெல் ஹுசைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    3ஆவது நாள் ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

    2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    kattana sevai